டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

திருநள்ளாறு கோயிலில் சனிப்பெயர்ச்சி பந்தக்கால் முகூர்த்தம்!

திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தில் சனிப்பெயர்ச்சி விழாவிற்கான பந்தக்கால் முகூர்த்தம் பல்வேறு சர்ச்சைகளுக்குப் பின்னர் இன்று நடைபெற்றது.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 3:24 am

தினமணி


திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தில் சனிப்பெயர்ச்சி விழாவிற்கான பந்தக்கால் முகூர்த்தம் பல்வேறு சர்ச்சைகளுக்குப் பின்னர் இன்று நடைபெற்றது.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் சுவாமி தேவஸ்தானம் ஸ்ரீ சனிபகவான் ஸ்தலத்தில் 2 1/2 ஆண்டுகளுக்கு ஒருமுறை சனிப்பெயர்ச்சி விழா வெகுவிமரிசையாக நடைபெறும். அவ்வாறு இந்த ஆண்டு டிசம்பர் 20-ஆம் 05.20 மணிக்கு மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பிரவேசிக்க உள்ள சனிப்பெயர்ச்சி விழாவிற்கான முன்னெடுப்பு பணிகளுக்காக இன்று பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. இந்த பந்தக்கால் முகூர்த்தம் சென்ற மாதம் 27-ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. 

Story image

இந்த நிலையில் ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் சுவாமி தேவஸ்தானத்தின் உள்துறை தருமை ஆதீனத்தின் கட்டுப்பாடு எனவும் மற்றும் மற்ற அனைத்து முடிவுகளும் அரசு சார்பில் சிறப்பு அதிகாரி தருமை ஆதீன பிரதிநிதியை கலந்தாலோசித்து முடிவு செய்யப்பட வேண்டியது என 2012ல் உயர் நீதிமன்ற தீர்ப்பு உள்ளதால் இந்த தேவஸ்தானத்தில் நடைபெறும் அனைத்து முடிவுகளும் இருதரப்பினரும் சேர்ந்து முடிவு செய்யப்பட வேண்டியது. ஆனால் இம்முறை ஆலய நிர்வாக சார்பில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீ ல ஸ்ரீ கந்தசாமி தம்பிரான் சுவாமிகளுடன் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக தேதி குறிப்பிட்டு, பின்னர் தம்பிரான் சுவாமிக்கு இவ்விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. 

தருமபுர ஆதீனத்தை ஆலோசிக்காமல் எடுக்கப்பட்ட முடிவு என்பதால்  தம்பிரான் சுவாமிகள் பந்தக்கால் முகூர்த்தத்தில் பங்கேற்காததால் ஐந்து கிராம மக்கள் இவ்விழாவினை புறக்கணித்ததால் பூஜைக்கு தயார் நிலையிலிருந்தும் பந்தக்கால் முகூர்த்தம் நடைபெறவில்லை. அப்போதே ஆதினத்தின் தரப்பில் வேறு தேதியில் மாற்றி அமைக்கப்படும் என ஆலய நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

அதனைதொடர்ந்து ஆதினம் சார்பில் நீதிமன்றத்தை நாடினர் அதற்கு புதுச்சேரி அரசு விளக்கம் அளிக்கக்கோரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனைதொடர்ந்து ஆலய நிர்வாகம் சார்பில் ஆதினத்துடன் ஆலோசித்து இன்று பந்தக்கால் மூகூர்த்தம் விழா சிறப்பாக நடைபெற்றது‌. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.