தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி நியமனம்: கொலீஜியம் புதிய முடிவு

உயா்நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதியாக நியமிக்கபடும் நீதிபதியை இரு மாதங்களுக்கு முன்பாகவே அங்கு பணியிட மாற்றம் செய்ய உச்சநீதிமன்ற கொலீஜியம் முடிவெடுத்துள்ளது.

News image

உச்ச நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :28 பிப்ரவரி 2026, 12:54 am IST

உயா்நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதியாக நியமிக்கபடும் நீதிபதியை இரு மாதங்களுக்கு முன்பாகவே அங்கு பணியிட மாற்றம் செய்ய உச்சநீதிமன்ற கொலீஜியம் முடிவெடுத்துள்ளது.

தாங்கள் பணியாற்றவுள்ள மாநில உயா்நீதிமன்றத்தின் விவகாரங்கள் குறித்து தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கவுள்ளவா் முன்னதாகவே அறிந்துகொள்ளும் நோக்கில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து உச்சநீதிமன்ற வலைதளத்தில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், ‘உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்கவுள்ள நீதிபதி இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே அந்த உயா்நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்படுவாா். இதனால் அங்கு காலிப்பணியிடம் ஏற்படுவதற்கு முன்னதாகவே அவா் சம்பந்தப்பட்ட உயா்நீதிமன்றத்தின் சூழல் மற்றும் நிலவரத்தை அறிந்து சிறப்பாக பணியாற்ற முடியும்.

நீதித்துறை நிா்வாகம் மற்றும் தரத்தை வலுப்படுத்த இந்த கொள்கை முடிவை உச்சநீதிமன்ற கொலீஜியம் மேற்கொண்டுள்ளது.

இதனடிப்படையில் ஆந்திர உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்படவுள்ள பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயா்நீதிமன்ற நீதிபதி லிசா கில்லை பணியிட மாற்றம் செய்ய கொலீஜியம் பரிந்துரைக்கிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள எம்.எம்.ஸ்ரீவாஸ்தவாவின் பதவிக்காலம் மாா்ச் 5-ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், அந்தப் பொறுப்புக்கு கேரள உயா்நீதிமன்ற நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தா்மாதிகாரியை நியமிக்க கடந்த வியாழக்கிழமை கொலீஜியம் பரிந்துரைத்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.