தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

திருப்பதியில் லட்டு வாங்க ஆதார் கட்டாயம்!

திருப்பதியில் லட்டு வாங்க ஆதார் கட்டாயமக்கப்பட்டது பற்றி...

News image
திருப்பதி கோயில்- (கோப்புப்படம்)
Updated On :29 ஆகஸ்ட் 2024, 9:46 am

DIN

திருப்பதியில் ஆதார் அட்டை காண்பித்தால் மட்டுமே லட்டு வழங்கப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

திருமலை திருப்பதி ஏழுமலையானை நாள்தோறும் 75 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். பண்டிகை மற்றும் விடுமுறை நாள்களில் கூடுதல் பக்தர்கள் வருகை தருவார்கள்.

திருப்பதியில் சாமி தரிசனம் செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் தேவஸ்தானம் சார்பாக பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், திருப்பதி லட்டுகளை வாங்கி இடைத்தரகர்கள் முறைகேடாக அதிக விலைக்கு விற்பனை செய்வதாக தொடர்ந்து புகார் எழுந்தது.

இதனைத் தொடர்ந்து, முறைகேட்டை தவிர்க்க ஆதார் அட்டை காண்பிக்கும் பக்தர்களுக்கு மட்டுமே இன்றுமுதல் லட்டு வழங்கப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

மேலும், ஒரு பக்தருக்கு ஒரு லட்டு மட்டுமே இலவசமாக வழங்கப்படும் என்றும், கூடுதல் லட்டு தேவைப்படுவோர் வழக்கம்போல் ரூ. 50 கொடுத்து பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.