தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோயில் தேரோட்டம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோயில் தேரோட்டம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

News image
Updated On :18 பிப்ரவரி 2024, 7:18 am

அவிநாசி: திருமுருகன்பூண்டி, திருமுருகநாதசுவாமி கோயில் தேரோட்டம் கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் ஒன்றாகவும், மனநோய் தீர்க்கும் திருத்தலமாகவும் திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோயில் விளங்குகிறது.

இக்கோயில் தேர்த்திருவிழா ஆண்டு தோறும் கோலகலமாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டு ஞாயிற்றுக்கிழமை காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில், சிறப்பு ஹோமம் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சுவாமியின் கொடியை எடுத்து கோயிலுக்குள் பிரகார உலாவந்து வேத மந்திரங்கள், வாத்தியங்கள் முழங்க, கொடியேற்றப்பட்டது.

Story image

இதன்பிறகு, உற்சவ மூர்த்திகள் பிரகார உலா, பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா ஆகியவை நடைபெற்றது. பிப்ரவரி 19ம் தேதி மாலையில், சூரிய, சந்திர மண்டலக்காட்சிகள், 20ம்தேதி பூதவாகன, சிம்ம வாகனக்காட்சிகள், 21ம் தேதி புஷ்ப வாகனக் காட்சிகளும், 22ம் தேதி பஞ்சமூர்த்திகளுடன் ரிஷப வாகனக்காட்சிகளும், 23ம்தேதி யானை வாகன, அன்னவாகன காட்சிகளும், சுவாமி திருக்கல்யாண உற்சவம் ஆகிய நிகழ்ச்சிகள்நடைபெறவுள்ளது.

இதையடுத்து, 24 ஆம் தேதி சனிக்கிழமை அதிகாலை விநாயகர், சண்முகநாதர், திருமுருகநாதர்சுவாமி, அம்பாள், சண்டிகேசுவரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

முக்கிய நிகழ்ச்சியாக சனிக்கிழமை மாலை 3 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுத்தல் தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 25ஆம் தேதி மாலை மீண்டும் தேரோட்டம் நடைபெறுகிறது. 26ஆம் தேதி தெப்பத்தேர் உற்சவம் நிகழ்ச்சியும், 27ஆம் தேதி ஸ்ரீசுந்தரர் வேடுபறி திருவிழா நடைபெறுகிறது. 28 ஆம் தேதி பிரம்மதாண்டவ தரிசனக் காட்சியும், 29 ஆம் தேதி மஞ்சள் நீர் திருவிழா, மயில் வாகனக்காட்சி ஆகியவற்றுடன் தேர்த் திருவிழா நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.