புத்தாண்டு பிறப்பு: நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 7 டன் மலர்களால் அபிசேகம்

ஆங்கில புத்தாண்டுப் பிறப்பை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 7  டன் மலர்களால் திங்கள்கிழமை அதிகாலை அபிசேகம் நடைபெற்றது.
புத்தாண்டு பிறப்பு: நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 7 டன் மலர்களால் அபிசேகம்


நாமக்கல்: ஆங்கில புத்தாண்டுப் பிறப்பை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 7  டன் மலர்களால் திங்கள்கிழமை அதிகாலை அபிசேகம் நடைபெற்றது.

நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சனேயர் கோயில் அமைந்துள்ளது. இங்கு, 18 அடி உயரத்தில், நின்றகோலத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். பல்வேறு மாநிலங்களில் இருந்தும், மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் சுவாமியை தரிசிக்க வருகின்றனர். 

தற்போது, சபரிமலை சீசன் என்பதால் ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகமாக உள்ளது. 2024 ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, ஏழு டன் எடை கொண்ட நாமக்கல் ஆஞ்சனேயருக்கு மல்லிகை, முல்லை, சம்பங்கி, மரிக்கொழுந்து, ரோஜா, வெள்ளை, சிகப்பு, மஞ்சள் சாமந்தி, துளசி உள்ளிட்ட பல்வேறு நறுமண மலர்களால் சுவாமிக்கு திங்கள்கிழமை காலை 6 மணி அளவில் சிறப்பு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. 

அதன் பிறகு சுவாமிக்கு சிறப்பு தீபாரதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை வழிபட்டு சென்றனர். அபிசேகத்துக்குப் பயன்படுத்திய மலர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகிக்கப்பட்டன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com