ராணிப்பேட்டை, ரத்தினகிரி அருள்மிகு பாலமுருகன் ஆலயத்தில் ஆடிக் கிருத்திகை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான ரத்தினகிரி முருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு சிறியவர் முதல் பெரியவர் வரை குடும்பம் குடும்பமாகக் காவடியைத் தோளில் சுமந்தபடி பம்பை மேளங்கள் முழங்கப் பக்தி பாடல்களைப் பாடி நடனம் ஆடி நடைப்பயணமாக ஆலயத்திற்கு வருகை தந்து பாலமுருகனைத் தரிசனம் செய்தனர். தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தி வழிபாட்டில் ஈடுபட்டு அருளாசி பெற்றனர்.
.jpeg)
பக்தி பரவசத்தில் பக்தர்கள்
முன்னதாக அருள்மிகு பாலமுருகன் சாமிக்கு பாலமுருகன் அடிமை சாமிகளின் மூலம் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றது. ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு உள் மாவட்ட மட்டுமின்றி பிற மாவட்டங்களிலிருந்தும் அதிகாலை முதல் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை தந்து வழிபாட்டினை மேற்கொண்டனர்.

காவடி சுமந்து பெண்கள் வழிபாடு
பக்தர்களின் நலன் கருதி மருத்துவக் குழுவினர் தீயணைப்புத் துறையினர் காவல் துறையினர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் என ஏராளமானோர் பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் நீர்மோர் உள்ளிட்டவைகள் கோயில் நிர்வாகம் மற்றும் சமூக ஆர்வலர்கள் மூலமாக வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


.jpeg?w=1200&q=65&auto=format%2Ccompress&fit=max)







