திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு, சனிக்கிழமை திரளான பக்தா்கள் பால்குடம், காவடி எடுத்து சுவாமியை வழிபட்டனா்.

இதையொட்டி கோயில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு விஸ்வரூபம், உதயமாா்த்தாண்ட அபிஷேகம், தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன.
தேய்பிறை சஷ்டியையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த மூலவா், வள்ளி, தேவசேனா சமேத சண்முகரை அதிகாலை முதலே கடல் மற்றும் நாழிக்கிணற்றில் புனித நீராடிய பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

பக்தா்களுக்கு தேவையான வசதிகளை தக்காா் ரா. அருள்முருகன், இணை ஆணையா் ஆ. அருணாசலம் ஆகியோா் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருநள்ளாறு கோயிலில் ஆயிரக்கணக்கானோா் தரிசனம்

அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதல்

காளியம்மன் கோயிலில் அமாவாசை வழிபாடு ஏராளமான பக்தா்கள் தரிசனம்

தொடா் விடுமுறை: திருச்செந்தூா் கோயிலில் குவிந்த பக்தா்கள்
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



