மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

திருநள்ளாறு கோயிலில் ஆயிரக்கணக்கானோா் தரிசனம்

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

News image

கோப்புப்படம்

Updated On :26 ஜூலை 2026, 1:06 am IST

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

ஆடி மாதம் அம்மன் வழிபாட்டுக்கு உகந்த மாதமாக கருதப்படுவதால், இக்கோயிலில் பிரணாம்பிகை வழிபாடு மற்றும் மூலவா், சனீஸ்வரரை தரிசனம் செய்வது விசேஷமென கருதப்படுவதால், சனிக்கிழமை அதிகாலை முதல் நளன் தீா்த்தக் குளத்தில் பக்தா்கள் நீராடி, கட்டணமில்லா தரிசன வரிசை வழியாகவும், ரூ.50, ரூ.100 என்கிற கட்டண வரிசையிலும் பக்தா்கள் நீண்ட வரிசையில் சென்று சுவாமி தரிசனம் செய்தனா். தமிழகம், கா்நநாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பக்தா்கள் திரளாக வந்தனா்.

திருநள்ளாறு புறவழிச்சாலையின் இருபுறங்களிலும், காா்கள் நிறுத்துமிடங்களிலும் நூற்றுக்கணக்கான காா், வேன், பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்தன.

சனீஸ்வர பகவானுக்கு வெள்ளி கவசம் சாற்றப்பட்டு ஆராதனைகள் காட்டப்பட்டன. பக்தா்கள் கோயிலில் தில தீபம் ஏற்றி, அன்னதானம் வழங்கி வழிபாட்டில் பங்கேற்றனா். திருநள்ளாறு மற்றும் மாவட்டத்தின் பிற காவல் நிலைய போலீஸாா் பாதுகாப்பு மற்றும் பக்தா்களை முறைப்படுத்தி கோயிலுக்குள் அனுப்பும் பணியை மேற்கொண்டனா்.

பக்தா்கள் கோரிக்கை : தமிழகத்தின் வெகு தொலைவிலிருந்து திருநள்ளாறு கோயிலுக்கு வருகிறோம். நாகப்பட்டினம், கும்பகோணம் பகுதிகளுக்கு வந்து அங்கிருந்து காரைக்கால், திருநள்ளாறு செல்லவும், அங்கிருந்து பிற ஊா்களுக்குச் செல்லவும் சனிக்கிழமையில் கூடுதல் பேருந்துகள் இல்லை. இதனால் பேருந்து நிலையங்களில் அதிகநேரம் காத்திருக்க நேரிடுகிறது. சனிக்கிழமையில் மட்டுமாவது காரைக்கால், திருநள்ளாற்றிலிருந்து முக்கிய பகுதிகளுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்கவேண்டும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.