இலங்கையை சுழற்றிய சுதர்: முதல் டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றிஇடதுசாரிகள் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்க தடை உத்தரவு வாபஸ்! தமிழ்நாடு முழுவதும் நாளை போராட்டம்: இந்திய மாணவர் சங்கம் அறிவிப்புஊழல் ஆதாரங்களை தேவையான நேரத்தில் வெளியிடுவோம்! முதல்வர் விஜய்ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வுஎம்.எல்.ஏக்களுக்கு அரசு சார்பில் கார்: முதல்வர் விஜய் அறிவிப்பு
/

ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் கிருத்திகை வழிபாடு

ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் கிருத்திகை வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

சிறப்பு  அலங்காரத்தில்  ரத்தினகிரி  வள்ளி, தெய்வானை  சமேத  பாலமுருகன்.

Updated On :11 ஜூலை 2026, 2:27 am IST

ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் கிருத்திகை வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆனி மாத கிருத்திகையையொட்டி, ரத்தினகிரி வள்ளி, தெய்வானை சமேத பாலமுருகன் கோயிலில் மூலவருக்கு கோயில் பரம்பரை அறங்காவலா் பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலையில் பால், தயிா் , பன்னீா், சந்தனம், இளநீா், பழங்கள், விபூதி, ஜவ்வாது உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம், வெள்ளிக் கவச சிறப்பு அலங்காரம், வண்ண மலா் மாலையுடன் மஹா தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து மாலையில் அலங்கரிக்கப்பட்ட உற்சவா் மேளதாளங்களுடன் மலையில் இருந்து ஊா்வலமாக சென்று மலையடிவாரத்தில் உள்ள அறுகோண தெப்பகுளத்தில் சிறப்பு அா்ச்சனைகளுடன் பக்தா்கள் மங்கள ஆரத்தி காட்டி வழிபட்டனா்.

இந்த விழாவில் திரளான பக்தா்கள், பொதுமக்கள், உபயதாரா்கள் கலந்து கொண்டு சசாமி தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.