
பஞ்சபூத சிவத் தலங்களில் வாயு தலமான காளஹஸ்தி சிவன் கோயிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள காளஹஸ்தியில் உள்ள ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெறும் அதன்படி இந்தாண்டு பிரம்மோற்சவம் நேற்று தொடங்கியது.
தொடர்ந்து 16-ம் தேதி வரை 13 நாள்களுக்கு விமரிசையாக நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு நேற்று மாலை கண்ணப்பர் மலையில் உள்ள கோயிலில் வேத மந்திரங்கள் முழங்கக் கொடியேற்றம் நடைபெற்றது.
பஞ்ச மூர்த்திகள் நான்கு மாட வீதிகளிலும் வலம் வந்தனர். திருவீதியுலாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.