மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

காமாக்யா கோயிலில் கோலாகலமாகத் தொடங்கிய நவராத்திரி விழா!

நாட்டின் 51 சக்தி பீடங்களில் ஒன்றாக திகழ்கிறது காமாக்யா கோயில்.

News image

காமாக்யா கோயில்

Updated On :27 செப்டம்பர் 2024, 10:41 am

அஸ்ஸாமில் உள்ள காமாக்யா கோயிலில் நவராத்திரி விழா கோலாகலமாகத் தொடங்கியுள்ளது.

மாநிலத்தின் நிலாச்சல் மலையின்மேல் அமைந்துள்ளது வரலற்றுச் சிறப்புமிக்க காமாக்யா திருக்கோயில். இங்கு நவராத்திரி விழா தனித்துவமான முறையில் கொண்டாடப்படுகிறது.

15 நாள்கள் நடைபெறும் துர்கா பூஜை திருவிழா நேற்று(செப். 26) அன்று தொடங்கியது, அர்ச்சகர்களின் ஸ்லோகங்கள் மற்றும் சடங்குகளுக்கு மத்தியில் துர்கா பூஜை வெகு விமர்சையாக தொடங்கியுள்ளது.

காமாக்யா கோயிலில் பதினைந்து நாள்கள் நடைபெறும் துர்கா பூஜை கிருஷ்ண நவமியில் தொடங்கி சுக்ல நவமி வரை நடைபெறுகிறது.

காமாக்யா கோயிலின் அர்ச்சகர் ஹிமாத்ரி சர்மா கூறுகையில்,

ஒவ்வொரு ஆண்டும் காமாக்யா கோயிலில் துர்கா பூஜையானது வெவ்வேறு உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. சடங்குகளின்படி, துர்கா சிலை வழிபாடு இங்கு செய்யப்படுவதில்லை.

மேலும் இங்கு குமாரி பூஜை விசேஷமானது. முதல் நாளில் ஒரு குமாரியும், இரண்டாவது நாளில் இரண்டு என ஒன்பதாம் நாளில் ஒன்பது குமாரிக்குப் பூஜைகள் நடத்தப்படுகிறது.

நாட்டின் 51 சக்தி பீடங்களில் ஒன்றான காமாக்யா கோயிலில் அம்மனின் யோனிப்பகுதி விழுந்த இடமாகக் கருதப்படுகிறது. அம்மனின் சக்தி பீடங்களில் இது காமகிரி பீடமாகத் திகழ்கிறது.

ராஜஸ்தானைச் சேர்ந்த பக்தர் ஒருவர் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் துர்கா பூஜை கொண்டாட்டத்தின்போது வரலாற்றுச் சிறப்புமிக்க கோயிலுக்குச் சென்று வருவதாகவும், இங்குச் செல்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.