போகி பண்டிகை: திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்..!
போகி பண்டிகையையொட்டி திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்..

திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் போகி பண்டிகையையொட்டி (ஜன.13) சுவாமியை தரிசிப்பதற்காக திரளான பக்தா்கள் குவிந்த வண்ணம் உள்ளனா்.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகக் கருதப்படும் திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் விளங்குகிறது. போகி பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக அதிகாலை முதல் கடலில் குளித்து திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
பொங்கலன்று அதிகாலை 1 மணிக்கு நடைதிறப்பு
பொங்கலை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை (ஜன. 14) திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம் தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறுகிறது. பக்தா்கள் வசதிக்காக நெல்லை, தென்காசி, விருதுநகா், மதுரை மாவட்டங்களுக்கு கூடுதலான பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.
காணும் பொங்கலன்று அதிகாலை 4 மணிக்கு நடைதிறப்பு
காணும் பொங்கலை முன்னிட்டு, கோயில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறவுள்ளது. பகலில் உச்சிக்கால தீபாராதனைக்குப் பிறகு சுவாமி அலைவாயுகந்தப்பெருமான் வெள்ளிக்குதிரையில் கோயிலில் இருந்து புறப்பட்டு சென்று பாளையங்கோட்டைச் சாலையில் உள்ள வேட்டை வெளி மண்டபத்தில் கணு வேட்டை நடைபெற்று, வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...