மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

வேலூர் தீர்த்தகிரி முருகன் கோயிலில் கும்பாபிஷேகம்!

வேலூர் தீர்த்தகிரி மலையில் அமைந்துள்ள முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

News image

வேலூர் தீர்த்தகிரி முருகன்

Updated On :8 ஜூன் 2025, 4:45 am

வேலூர் அருகே தீர்த்தகிரி மலை மீது அமைந்துள்ள முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.

வேலூர் அருகே புதுவசூர் தீர்த்தகிரி மலை மீது அமைந்துள்ள வடிவேலு சுப்பிரமணியர் திருக்கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்திருந்து முருகரை வழிபாடு செய்வது வழக்கம்.

அந்த மலை மீது முருகருக்கு 92 அடி உயரமுள்ள சிலை அமைக்கப்பட்டு ஊர் பெரியவர்களால் கும்பாபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது.

இன்று கும்பாபிஷேகம் செய்ய பல்வேறு நதிகளில் இருந்து புனித நீர் எடுத்துவரப்பட்டு யாகசாலை அமைக்கப்பட்டு வேத மந்திரங்களை வேத மேளதாளங்களுடன் புனித நீரை டிரோன் மூலமாக எடுத்துச் சென்று புதிதாக அமைக்கப்பட்ட 92 அடி உயரமுள்ள முருகர் மீது ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

இந்த விழாவில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, ஆகிய மாவட்டங்களில் இருந்தும் அருகே உள்ள ஆந்திரம், கர்நாடக மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்திருந்து உலகின் மூன்றாவது உயரமுள்ள சிலை என கருதப்படும் முருகனை அரோகரா அரோகரா என கோஷமிட்டு பக்தி பரவசத்துடன் வழிபாடு செய்தனர்.

இந்தக் கும்பாபிஷேக விழாவில் மக்களுக்கு எந்தவிதமான அசம்பாவிதம் ஏற்படாமல் இருப்பதற்கு வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மதிவாணன் தலைமையில் காவல்துறையினரால் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.