சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப. சுமதி நியமனம்மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து! முதல்வரான பிறகு டி.கே. சிவகுமாரின் முதல் உத்தரவுஅணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு ஈரான் ஒப்புதல்: டொனால்ட் டிரம்ப்கையிருப்பு தங்கத்தை விற்கவில்லை: வதந்திகளுக்கு ஆர்பிஐ முற்றுப்புள்ளி!கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்!
/

மாசி பௌர்ணமி: திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம்!

கிரிவலம் வர உகந்த நேரத்தை அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்தது.

News image

திருவண்ணாமலை

Updated On :12 மார்ச் 2025, 5:51 pm IST

மாசி மாத பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரத்தை அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்தது.

திருவண்ணாமலையில் கிரிவலம் பிரசித்திப் பெற்றது. இங்குள்ள 14 கி.மீ தொலைவு கிரிவலப் பாதையை மாதம்தோறும் பெளா்ணமி நாள்களில் பக்தா்கள் வலம் வந்து அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனை வழிபடுவது வழக்கம்.

அதன்படி, மாசி பெளா்ணமி வியாழக்கிழமை (மார்ச் 13) காலை 11.40 மணிக்குத் தொடங்கி வெள்ளிக்கிழமை (மார்ச் 14) பிற்பகல் 12.54 மணிக்கு முடிவடைகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

மேலும், பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிா்வாகமும், கோயில் நிா்வாகமும் செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.