2025 - சனிப்பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நன்மை?

மார்ச் 29 -ல் நடைபெறும் சனிப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்...
சனி பகவான்
சனி பகவான்
Published on
Updated on
2 min read

ஜோதிடத்தில் திருக்கணிதம், வாக்கியம் என இரு முறைகளில் கணிக்கப்படுகின்றன.

திருக்கணிதப்படி வரும் (2025) மார்ச் 29 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நிகழ உள்ளது (வாக்கிய பஞ்சாங்கத்தின்படி அடுத்தாண்டு 2026 மார்ச் 6 ஆம் தேதிதான் சனிப் பெயர்ச்சி நடைபெறவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.)

மார்ச் 29 - சனிப்பெயர்ச்சியால் நன்மை பெறும் ராசிகள், நன்மை தீமை கலந்து பெறும் ராசிகள், பரிகாரத்தின் மூலம் பயன்பெறும் ராசிகள் எவை என்பதை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணித்து வழங்கியுள்ளார்.

சுக்ல பிரதமையும் சனிக்கிழமையும் ரேவதி நட்சத்திரமும் அமிர்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் இரவு 11:01-க்கு சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு மாறுகிறார். மீன ராசிக்கு வரும் சனி பகவான் தொடர்ந்து இரண்டரை வருட காலத்திற்கு இந்த ராசியில் சஞ்சாரம் செய்து அருளாசி வழங்குவார்.

குருவிற்குப் பார்வை பலமும், சனிக்கு ஸ்தான பலமும் சொல்லப்பட்டிருக்கிறது. சனி எந்த ஸ்தானத்தைப் பார்க்கிறாரோ அந்த ஸ்தானம் சிறிது காலத்திற்குப் பிறகு பலமும், விருத்தியும் அடைகிறது. சனிக்கு 3, 7, 10 ஆகிய பார்வைகள் உள்ளன. அதாவது சனி இருக்கும் இடத்திலிருந்து 3, 7, 10 ஆகிய இடங்களைப் பார்வையிடுகிறார். மூன்றாம் பார்வையும், பத்தாம் பார்வையும் சிறப்புப் பார்வைகளாகும்.

ஒவ்வொரு ராசியிலும் சனியின் நிலை

மேஷம் - நீசம்

ரிஷபம் - நட்பு

மிதுனம் - நட்பு

கடகம் - பகை

சிம்மம் - பகை

கன்னி - நட்பு

துலாம் - உச்சம்

விருச்சிகம் - பகை

தனுசு - நட்பு

மகரம் - ஆட்சி

கும்பம் - ஆட்சி

மீனம் - நட்பு

பொதுவாக ராசிகள் பெறும் பலன்களின் அளவுகள்

நன்மை பெறும் ராசிகள்

மிதுனம் - கடகம் - துலாம் - மகரம்

நன்மை தீமை இரண்டும் கலந்து பலன்கள் பெறும் ராசிகள்

ரிஷபம் விருச்சிகம்

பரிகாரத்தின் மூலம் பயன்பெறும் ராசிகள்

மேஷம் - சிம்மம் - கன்னி - தனுசு - கும்பம் - மீனம்

சனி காயத்ரீ மந்திரம்

ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்!

ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்!

ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி தன்னோ சனைச்சர ப்ரசோதயாத்!

ஓம் சனீஸ்வராய வித்மஹே சாயாபுத்ராய தீமஹி தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்!

ஓம் சதுர்புஜாய வித்மஹே தண்டஹஸ்தாய தீமஹி தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்!

சனி ஸ்லோகம்

நீலாஞ்ஜன ஸமாபாஸம் ரவிபுத்ரம் யமாக்ரஜம்

சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி ஸனைச்சரம்!

அர்த்தம்:

கண்ணின் மை போன்று கருமை நிறம் கொண்டவனே! சூரியனின் மைந்தனே! எமதர்மனின் சகோதரனே! சாயாதேவியின் வயிற்றில் பிறந்தவனே! மெதுவாகச் சஞ்சாரம் செய்பவனே! சனிபகவானே! உன்னைப் போற்றுகிறேன்.

பொதுவான பரிகாரங்கள்

• தினமும் விநாயகர் - ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வது சிறந்த பலனைத் தரும்.

• தினமும் விநாயகர் அகவல் - ஹனுமான சாலீசா - சுந்தரகாண்டம் பாராயணம் செய்வது நல்ல பலன்களைப் பெற்று தரும்.

• அடிக்கடி மஹாகணபதி ஹோமம் அல்லது பஞ்சமுக ஆஞ்சனேயர் ஹோமம் செய்வதும் நிறைவான மாற்றத்தைக் கொடுக்கும்.

• தினமும் முன்னோர்கள் வழிபாட்டைச் செய்வது - குறைந்தபட்சம் அமாவாசை தினத்தன்றாவது முன்னோர்களை வழிபடுவது பலம் சேர்க்கும்.

• தினமும் காகத்திற்கு சாதம் வைப்பது மிகச் சிறந்த பரிகாரமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com