திருவண்ணாமலையில் அமைந்துள்ள அண்ணாமலையார் கோயிலில், பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. கோவிலை ஒட்டியிருக்கும் அண்ணாமலையார் மலை என்று அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பௌர்ணமி நாள்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம்.
இந்த நிலையில், சித்ரா பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, சித்ரா பௌர்ணமி 30-ந் தேதி (வியாழக்கிழமை) இரவு 9.52 மணிக்குத் தொடங்கி மறுநாள் மே 1-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 11.08 மணிக்கு நிறைவடைகிறது.
இந்தாண்டு சித்ரா பௌர்ணமிக்கு 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலத்திற்கு வருவார்கள் என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எதிர்க்கப்படுகிறது. இதனால், மாவட்ட நிரவாகத்தின் மூலம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றன.
பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு சிறப்பு ரயிலும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Summary
The auspicious time for undertaking the full moon Girivalam at the Annamalaiyar Temple in Tiruvannamalai has been announced.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருவண்ணாமலை: கிரிவலம் செல்ல உகந்த நேரம்!

திருவண்ணாமலையில் நவீன எரிவாயு தகன மேடை தொடக்கம்

சித்திரை பெளா்ணமி: திருவண்ணாமலைக்கு கூடுதல் ரயில்கள் இயக்கக் கோரிக்கை

திருவண்ணாமலையில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!
வீடியோக்கள்

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு



