சென்செக்ஸ் 172 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 24,250 க்குக் கீழே நிறைவு!!பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறைமாதம் ஒரு நாள் 'புத்தகப்பை இல்லா நாள்': பள்ளிக் கல்வித் துறைபள்ளிகளில் ஓடி விளையாடு என்ற திட்டத்தின் மூலம் நாள்தோறும் விளையாடலாம்: பள்ளிக் கல்வித் துறைபரந்தூர் திட்டத்தைக் கைவிடுவது அரசுக்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும்! உதயநிதிபள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சுகொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு! பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

ஆவணி மூலத் திருவிழா! பிட்டுக்கு மண் சுமந்த லீலை!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் ஆவணி மூலத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக பிட்டுக்கு மண் சுமந்த லீலை நடைபெற்றது.

ஆவணி மூலத் திருவிழா

Published On :24 ஆகஸ்ட் 2026, 6:08 pm IST

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் ஆவணி மூலத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக பிட்டுக்கு மண் சுமந்த லீலை இன்று நடைபெற்றது.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஆவணி மூலத் திருவிழா கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சுந்தரேசுவரரின் பல்வேறு திருவிளையாடல்களை நினைவுகூரும் வகையில் சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றன.

அந்த வகையில், ஆவணி மூலத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பிட்டுக்கு மண் சுமந்த லீலை இன்று மதுரை ஆரப்பாளையம் அருகே உள்ள புட்டுத்தோப்பு பகுதியில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி சுந்தரேசுவரர் சுவாமி மண்வெட்டி மற்றும் மண்கூடையுடன் மண் சுமந்த திருக்கோலத்தில் புட்டுத்தோப்பு மண்டபத்திற்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இந்த திருவிளையாடல் நிகழ்வை காண மதுரை மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு, மனம் உருகி சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கு முன்னதாக நேற்று நரியைப் பரியாக்கிய லீலை நடைபெற்றது. சுந்தரேசுவரர் பாண்டிய மன்னன் அலங்காரத்தில் தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார்.

Story image

மீனாட்சி அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நரியை குதிரையாக மாற்றிய சிவபெருமானின் திருவிளையாடலை நினைவுகூரும் வகையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. அதற்கு முந்தைய நாளான ஆகஸ்ட் 22ஆம் தேதி சுந்தரேசுவரர் சுவாமியின் பட்டாபிஷேக நிகழ்வு நடைபெற்றது. சுந்தரேசுவரர் பாண்டிய மன்னராக பட்டம் சூடும் நிகழ்வு விமரிசையாக நடைபெற்ற நிலையில் , தொடர்ந்து நரியைப் பரியாக்கிய லீலையும், அதன் தொடர்ச்சியாக இன்று பிட்டுக்கு மண் சுமந்த லீலையும் நடைபெற்றது.

பிட்டுக்கு மண் சுமந்த லீலையின் பின்னணி

மதுரையில் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது, ஆற்றின் கரையை பலப்படுத்துவதற்காக மண் சுமக்கும் பணியில் பொதுமக்கள் ஈடுபடுத்தப்பட்டதாக ஐதீகம். ஒவ்வொரு வீட்டில் இருந்தும் ஒருவர் மண் சுமக்கும் பணிக்கு வர வேண்டும் என பாண்டிய மன்னன் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

அப்போது பிட்டு விற்று வாழ்க்கை நடத்தி வந்த வந்தி என்ற மூதாட்டியால் மண் சுமக்கும் பணிக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாகவும் , தனது சார்பாக கூலியாளாக ஒருவர் வந்து மண் சுமக்க வேண்டும் என சிவபெருமானை வேண்டியதாகவும் திருவிளையாடல் புராணம் கூறுகிறது. வந்தியின் வேண்டுதலை ஏற்ற சிவபெருமான் கூலியாளாக வந்து மண் சுமந்ததாகவும், பணியின்போது ஓய்வு எடுத்ததாகவும் ஐதீகம். இதனால் கோபமடைந்த பாண்டிய மன்னன், கூலியாளாக வந்த சிவபெருமானை தண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

சிவபெருமானுக்கு விழுந்த அடி உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் பட்டதாகவும், இதன் மூலம் தனது திருவிளையாடலை வெளிப்படுத்தி பாண்டிய மன்னனுக்கு உண்மையை உணர்த்தியதாகவும் ஐதீகம். இந்த திருவிளையாடலை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஆவணி மூலத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக புட்டுத்தோப்பில் பிட்டுக்கு மண் சுமந்த லீலை நடைபெற்று வருகிறது.

இன்றைய நிகழ்வில் மண்வெட்டி, மண்கூடையுடன் மண் சுமந்த திருக்கோலத்தில் எழுந்தருளிய சுந்தரேசுவரரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். புட்டுத்தோப்பு பகுதியில் திரண்டிருந்த பொதுமக்கள் மனம் உருகி சுவாமியை தரிசித்து வழிபட்டனர்.

ஆவணி மூலத் திருவிழாவின் தொடர்ச்சியாக நாளை ஆகஸ்ட் 25ஆம் தேதி விறகு விற்ற லீலை நடைபெற உள்ளது. இதையடுத்து ஆகஸ்ட் 26ஆம் தேதி சட்டத்தேர் மற்றும் சப்தாவரணம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற உள்ளன. தொடர்ந்து தீர்த்தவாரி உள்ளிட்ட நிகழ்வுகளுடன் ஆவணி மூலத் திருவிழா நிறைவு பெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.