மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் ஆவணி மூலத் திருவிழாவில் மாணிக்கம் விற்ற லீலை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் ஆவணி மூலத் திருவிழா கடந்த 10 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது.
ஞாயிற்றுக்கிழமை முதல் தினமும் ஐதீக முறைப்படி சிவபெருமானின் திருவிளையாடல் (லீலை) நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதன்படி, மதுரையில் சிவபெருமான் மாணிக்கம் விற்ற லீலை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மதுரையை ஆட்சி செய்த வீரபாண்டியன் என்ற மன்னனின் மறைவுக்குப் பிறகு அரண்மனை பொக்கிஷங்கள் களவுப் போனதால், வீரபாண்டியனின் மகனுக்கு முடிசூட்டுவதற்கு மணிமகுடம்கூட இல்லாமல் போனது. இதுதொடா்பாக, சோமசுந்தரப் பெருமானிடம் அமைச்சா்கள் முறையிட்டதும், சிவபெருமான் மாணிக்க வியாபாரியாக வந்து மணிமகுடத்துக்குத் தேவையான நவமணிகளை வழங்கி, வீரபாண்டியனின் மகனுக்கு அபிடேக பாண்டியன் எனப் பெயா் சூட்டினாா் என்ற ஐதீகப்படி இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையொட்டி, மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவா் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினா். சுவாமி, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, மாணிக்கம் விற்ற லீலை பக்தா்களுக்கு விளக்கப்பட்டது. பிறகு, மகா தீபாரதனை நடைபெற்றது.
இரவு நிகழ்வாக மீனாட்சி அம்மன் காமதேனு வாகனத்திலும், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரா் கயிலாய பா்வத வாகனத்திலும் எழுந்தருளி பாண்டிய வேளாளா் தெரு, மேலமாசி வீதி, நேதாஜி வீதி, மேல ஆவணி மூல வீதி, வடக்கு, கிழக்கு ஆவணி மூல வீதிகள் வழியே திருக்கோயிலில் சோ்த்தியாகினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் நாரைக்கு மோட்சம் அருளிய லீலை

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் ஆவணி மூலத் திருவிழா: கருங்குருவிக்கு உபதேசம் அருளிய லீலை

மயங்கி விழுந்த பக்தா் உயிரிழப்பு

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் ஆவணி மூலத் திருவிழா கொடியேற்றம்
விடியோக்கள்
Dimagi Naxal: யாரைச் சொல்கிறார் பிரதமர் மோடி? | PM Modi |



