
நடராஜர் கோயிலில் காடவராய கோப்பெரும் சிங்கன் பிறந்தநாள் விழா!
சிதம்பரம் நடராஜர் கோயிலில் கிழக்கு கோபுரத்தை கட்டிய கோப்பெரும் சிங்கன் பிறந்தநாள் விழா பற்றி..

காடவராய கோப்பெரும் சிங்கன் பிறந்தநாள் - file photo
சிதம்பரம் நடராஜர் கோயிலில் கிழக்கு கோபுரத்தை கட்டியவரும், தில்லைக் காளியம்மன் கோயிலைக் கட்டியவருமான காடவராய கோப்பெரும் சிங்கன் 816-வது பிறந்தநாள் விழா புதன்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.
மேலும், காடவராய கோப்பெறும் சிங்கன் கடலூர் மாவட்டத்தில் பொன்னேரியை வெட்டியதாகவும் கல்வெட்டு வரலாறு கூறுகிறது. சிறப்பு வாய்ந்த அவருடைய ஆவணி திருவோணம் நட்சத்திரமான புதன்கிழமை அன்று பிறந்தநாள் விழா காண்டவராய பவுண்டேஷன் சார்பில் நடராஜர் கோயிலில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமானுக்கு சிறப்பு அர்ச்சனையும் , கிழக்கு கோபுரத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. விழாவை முன்னிட்டு முன்னதாக மாமன்னன் காடவராய கோப்பெரும் சிங்கன் படம் ஊர்வலம் நடைபெற்று நடராஜர் திருக்கோயில் அடைந்தது.
பின்னர், சிதம்பரம் தில்லைக் காளியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தியாகவல்லி சாமி கச்சிராயர், கடலூர் சீனிவாச படையாட்சி, ரமேஷ் கச்சிராயர் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்து நடத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






