

எம்பார் சுவாமிக்கு 1000வது ஆண்டு அவதார உற்சவம் திருத்தேர் விழாவில் பல்வேறு கிராமத்தைச் சேர்ந்த கிராம மக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே மதுரமங்கலம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ கமலவல்லி சமேத ஸ்ரீ வைகுண்ட பெருமாள் (எ) எம்பார் சுவாமி திருக்கோயில் 1,026-ம் ஆண்டு அவதரித்தவர் வைணவ மகான் எம்பார் சுவாமிகள். இவர், ராமானுஜரின் சிற்றன்னையின் மகன் ஆவர். ஆண்டுதோறும் மதுரமங்கலத்தில் எம்பார் சுவாமி உற்சவ விழா 10 நாள்கள் விமரிசையாக நடைபெறும்.
இந்தாண்டு எம்பாரின் 1,000வது அவதார உற்சவ விழா கடந்த 22-ஆம் தொடங்கி தினந்தோறும் காலை மற்றும் மாலை இரு வேலைகளில் பல்வேறு வாகனத்தில் சாமி திருவிதி உலா நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று எம்பார் சாமிக்கு திருத்தேர் உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.
30 அடி உயரம் கொண்ட தேரை பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு எம்பார் பெருமாள் ராஜா அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தார். இதனை மதுரமங்கலம் சுற்றியுள்ள பல்வேறு கிராமத்தில் உள்ள கிராம மக்கள் தேரை கோவிந்தா கோவிந்தா எனப் பக்தி பரவசத்துடன் வடம் பிடித்து இழுத்தனர்.
கோயில் சுற்றியுள்ள சன்னதி வழியாகத் தேர் வலம் வந்து பக்தர்களுக்குக் காட்சியளித்த நிலையில் வழியெங்கும் பக்தர்கள் தீபாராதனை காண்பித்து வழிபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.