குவாஹாட்டியில் உள்ள காமாக்யா தேவி கோயில் மூன்று நாள்களுக்குப் பின்னர் ஜூன் 26 (இன்று) காலை நடை திறக்கப்பட்டது.
அம்புபாச்சி மேளா
அஸ்ஸாமின், குவாஹாட்டியில் உள்ள நீலாச்சல் மலையின் உச்சியில் அமைந்துள்ளது காமாக்யா தேவி கோயில். இந்தக் கோயிலில் புகழ்பெற்ற அம்புபாச்சி திருவிழா நடைபெறுகிறது. இந்தக் கோயிலில் அன்னை காமாக்யா தேவியின் வருடாந்திர மாதவிடாய் சுழற்சிக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன்-ஜூலை மாதத்தில் கோயிலின் நடை சாத்தப்படுவது வழக்கம்.
கோயிலின் நடை திறப்பு
இந்தாண்டு அம்புபாச்சி திருவிழாவை முன்னிட்டு காமாக்யா கோயிலின் நடை ஜூன் 22-ம் தேதி இரவு 9 மணிக்கு சாத்தப்பட்டது. மூன்று நாள்களுக்குப் பிறகு இன்று அதிகாலை கோயிலில் தூய்மைப்படுத்தும் பணி நடத்தப்பட்டு, அதன்பிறகு பக்தர்கள் தரிசனத்துக்காகக் கோயில் நடை திறக்கப்பட்டது.
உள்ளூர மட்டுமல்லாது, வெளியூர்களிலிருந்தும் வந்துள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் அன்னை காமாக்யா தேவியை காண நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மாவின் எக்ஸ் தளப் பதிவில்,
காமாக்யா கோயிலின் நடை இன்று காலை திறக்கப்பட்டது முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அன்னையைத் தரிசித்து வருகின்றனர். இந்தாண்டு எட்டு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அன்னை காமாக்யா கோயிலில் நடைபெறும் அம்பூபாச்சி நிகழ்வின் பின்னணியில் உள்ள அம்சம் இணையற்றது. இது அஸ்ஸாமின் நாகரிக பாரம்பரியத்தில் (பெண் சக்தியின் ஆற்றலின்) முக்கியத்துத்தின் அடையாளமாகத் திகழ்கிறது என எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இன்று முழுவதும் கோயில் நடை திறந்திருக்கும். பக்தர்கள் அமைதியான முறையில் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கோயில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்தாண்டு..
இத்திருவிழாவிற்காக நாடு முழுவதிலும் இருந்தும் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் இங்குக் கூடுவார்கள். மாநிலத்தின் முக்கிய சுற்றுலா நிகழ்வாக கருத்தப்படும் அஸ்ஸாமின் காமாக்யா தேவி கோயிலில் கடந்தாண்டு 42 வெளிநாட்டினர் உள்பட மொத்தம் 7,72,019 பேர் பங்கேற்றனர். 2024ல் வெளிநாட்டிலிருந்து வந்த 20 பேர் உள்பட மொத்தம் 7,46,066 பக்தர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
Ambubachi Mela ends as Kamakhya temple doors reopen for devotees .
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










