திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மார்ச் 13ல் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,
பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் கோதண்டராமர் கோயிலில் பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது. அதன்படி, கோதண்டராமர் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வரும் 17 முதல் 25 வரை நடைபெறுகிறது.
அதற்கு முன்னதாக பாரம்பரிய முறையில் வரும் 13-ஆம் தேதி ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடத்தப்படுகிறது. அன்றைய தினம் காலை 6.30 மணி முதல் 9 மணி வரை கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப் பணி நடக்கிறது. அப்போது கோயிலின் மூலவர் அறை, சுவர்கள், மேற்கூரைகள், மாடங்கள், தூண்கள், பூஜைகளுக்கு பயன்படுத்தக்கூடிய பாத்திரங்கள் உள்பட கோயில் வளாகம் முழுவதும் சுத்தம் செய்யப்படுகிறது.
அதன்பிறகு, நறுமணப் பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட புனித நீர் கலவையைக் கோயில் வளாகம் முழுவதும் தெளிக்கப்படுகிறது. அதன்பிறகு மூலவருக்குப் பூஜைகள் முடிந்ததும் சுவாமி தரிசனத்திற்குப் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Summary
The Tirupati Devasthanams have announced that the Azhwar Thirumanjanam will be held on March 13 at the Tirupati Ezhumalaiyan Temple.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஏழுமலையான் லட்டு விற்பனையில் சாதனை: ஓராண்டில் 13.95 கோடி லட்டுகள் விற்பனை

ஏழுமலையான் விஐபி தரிசன மோசடி
மார்ச் 30ல் பெரம்பூரில் விஜய் வேட்புமனு தாக்கல்?

திருப்பதியில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


