உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

ராம நவமி: சீரடி சாய் பாபா கோயில் இன்று முழுவதும் நடை திறப்பு!

சாய் பாபா அவதார தினமான இன்று சீரடியில் கோலாகலம்..

sai baba

சீரடி சாய் பாபா - DPS

Published On :

ஸ்ரீ ராம நவமியான இன்று சாய் பாபாவின் அவதாரத் திருநாளையொட்டி சீரடியில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றனு.

ராம அவதாரத்துக்குப் பிறகு பல ஆயிரம் ஆண்டுகள் கழித்து ஆவணி தேய்பிறை அஷ்டமி திதியில் ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்தார். அந்த அவதாரம் நிறைவு பெற்று பல ஆயிரம் ஆண்டுகள் கடந்த நிலையில், ஒரு பங்குனி மாதம் நவமி திதியன்று சாய் பாபா அவதாரம் நிகழ்ந்ததாக சொல்லப்படுகிறது.

ஸ்ரீ ராம நவமியான இன்று சாய் பாபாவின் அவதாரத் திருநாளாகவும் ஜெயந்தியாகவும் பக்தர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது.

கோடிக்கணக்கான மக்கள் மனதில் கடவுள் அவதாரமாகக் கருதப்படும் சாய்பாபா அவதரித்த தினமான இன்று சீரடியில் அவரின் பிறந்தநாளைக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இன்று காலை முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் பாபாவின் அருளைப் பெற சீரடியில் குவிந்துள்ளனர்.

பக்திப் பரவசத்துடன் ஸ்ரீராம நவமி விழா கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றது. விழாவைக் கொண்டாடும் வகையில், சீரடி கோயில் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

சீரடி சாய் பாபாவின் இரவு ஆர்த்தி பூஜைக்குப் பின் 10 மணியளவில் கோயில் நடை மூடப்படுவது வழக்கம். இன்று பாபாவின் அவதார திருநாளையொட்டி பல்வேறு மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சீரடிக்கு வருகை தந்துள்ளனர்.

எனவே, பக்தர்களின் வருகையையொட்டி சீரடி சாய் பாபா கோயில் இன்று இரவு முழுவதும் கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும் என சீரடி சாய் பாபா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

Summary

Sri Ram Navami festival celebrations have started in a devotional atmosphere at the Saibaba temple in Shirdi. Lakhs of devotees have gathered in Shirdi to seek the blessings of Saibaba.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.