வெலிங்டன் டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் இந்தியா ஆதிக்கம்! நியூசி. பந்துவீச்சாளர்கள் திணறல்!இன்று கரையைக் கடக்கிறது ‘அக்வான்’ புயல்: 1 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்புகாற்றின் தரம் ‘மோசம்’ பிரிவில் 280 ஆக உயா்வு: நாளைவரை ‘மிக மோசம்’ பிரிவுக்கு செல்ல வாய்ப்பு100 புதிய மின்சார பேருந்துகள் இன்று அறிமுகம்: மொத்த பேருந்துகளின் எண்ணிக்கை 7,000-ஐ தாண்டியது ராகுலை விட ‘ஏஐ’ சிறப்பாகச் செயல்படும்! பாஜக விமா்சனம்இந்தியா்களுக்கு ‘விசா’ சலுகை தொடராது: மலேசியா அறிவிப்பு

வங்காரம்பேட்டை ஸ்ரீ ருத்ர மகா காளியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

400 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ ருத்ர மகா காளியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.

கும்பாபிஷேகம்

Updated On :

400 ஆண்டுகள் பழமையான வங்காரம்பேட்டை ஸ்ரீ ருத்ர மகா காளியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

பாபநாசம் தாலுக்கா, வங்காரம்பேட்டை கிராமத்தில் ஸ்ரீ ருத்ர மகா காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு பணிகள் முழுமையாக நிறைவுற்ற நிலையில் குடமுழுக்கு விழாவிற்கான ஏற்பாடுகள் தொடங்கின. குடமுழுக்கு விழாவை முன்னிட்டு கடந்த 18 ஆம் தேதி விக்னேஷ்வர பூஜையுடன் முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது. இன்று நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவுபெற்று மகா பூர்ணாஹூதி நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க கடம் புறப்பாடு, நடைபெற்று ஸ்ரீ ருத்ர மகா காளியம்மன் ஆலய விமான கலசம் மற்றும் மூலவர், பரிவார தெய்வங்களின் கோபுர கலசங்களுக்குப் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு வெகு விமர்சையாக நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக நிகழ்ச்சி பிரதான பக்தர்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்து வழிபட்டனர்

குடமுழுக்கு விழாவிற்கான ஏற்பாடுகளை வங்காரம்பேட்டை கிராம நாட்டாமைகள் கிராமவாசிகள், இளைஞர்கள், ஆலய திருப்பணி குழுவினர் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.