மக்களவைத் தொகுதிகளை 50% அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனைஎம்பிபிஎஸ், பிடிஎஸ் இணைய விண்ணப்பப் பதிவு தொடக்கம்!தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

வண்ணாத்திக்குட்டை வள்ளலார் தருமச் சாலையில் புத்தாண்டு சிறப்பு பூஜை 

வாழப்பாடி அருகே வண்ணாத்திக்குட்டை வள்ளலார் தருமச் சாலையில் புத்தாண்டு தினத்தையொட்டி உலக நன்மைக்காக சிறப்பு பூஜை வழிபாடு வெகு விமர்சியாக நடைபெற்றது.

News image

புத்தாண்டு சிறப்பு பூஜை வழிபாட்டில் பங்கேற்ற பக்தர்கள்.

Updated On :1 ஜனவரி 2021, 5:25 pm IST

வாழப்பாடி அருகே வண்ணாத்திக்குட்டை வள்ளலார் தருமச் சாலையில் புத்தாண்டு தினத்தையொட்டி உலக நன்மைக்காக சிறப்பு பூஜை வழிபாடு வெகு விமர்சியாக நடைபெற்றது.

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே வண்ணாத்திக்குட்டை கிராமத்தில் அக்ஷயா பள்ளி வளாகத்தில், வள்ளலார் கருணைக்கரங்கள் தருமசாலை இயங்கி வருகிறது.இங்கு மாதந்தோறும் பூசதினத்தன்று அணையா தீபம் ஏற்றி, சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்று வருகிறது.

இன்று வெள்ளிக்கிழமை புத்தாண்டு தினத்தையொட்டி உலக நன்மைக்காக, சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கருணைக்கரங்கள் தருமச்சாலை நிர்வாகிகள், சோமம்பட்டி சிவா, செல்வி, சிலம்பரசன், விஜய் மற்றும் ஆசிரியர் ராஜசேகரன் ஆகியோர் செய்திருந்தனர்.

முன்னதாக சிறுவர், சிறுமியருக்கு, திருவருட்பா மகா மந்திரம், அகல் பாடல்கள் பயிற்சி மற்றும் ஒப்புவித்தல் பயிற்சி நடைபெற்றது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.