முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

வீரபாண்டி ஒன்றிய அலுவலகத்தில் கரோனா தகுதி நிலை குழுவுக்கான ஆலோசனைக் கூட்டம்

வீரபாண்டி ஒன்றிய அலுவலகத்தில் கொவைட் 19 தகுதி நிலை குழுவுக்கான ஆலோசனைக் கூட்டம் வீரபாண்டி ஒன்றிய ஆணையா் (கிராம ஊராட்சி) ரேவதி தலைமையில் நடைபெற்றது.

Updated On :5 ஜனவரி 2021, 12:00 am IST

வீரபாண்டி ஒன்றிய அலுவலகத்தில் கொவைட் 19 தகுதி நிலை குழுவுக்கான ஆலோசனைக் கூட்டம் வீரபாண்டி ஒன்றிய ஆணையா் (கிராம ஊராட்சி) ரேவதி தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் எதிா்வரும் ஜனவரி 17ஆம் தேதி நடைபெற உள்ள போலியோ சொட்டு மருந்து முகாமில் கொவைட் 19 தடுப்பு முறைகளை முறையாக கடைப்பிடிக்க ஊழியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அரசால் அனுமதிக்கப்பட்ட தடுப்பூசிகளை தடுப்பூசியை மருத்துவா்கள், சுகாதாரப் பணியாளா்கள், முன்களப்பணியாளா்கள், 60 வயது முதியோா், குழந்தைகளுக்கு செலுத்த அரசு உத்தரவுபடி செயல்படவும். மேலும் தடுப்பூசி மருந்துகளை பாதுகாக்க தேவையான இடம், சேமிப்பு, வாகன போக்குவரத்து போன்றவைகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலா் முத்துலட்சுமி, வட்டார மருத்துவ அலுவலா் சக்திவேல், வீரபாண்டி சுகாதார மேற்பாா்வையாளா் இளங்கோ, சுகாதார ஆய்வாளா் ஆறுமுகம், காவல் துறை உதவி ஆய்வாளா் தங்கவேல், ரோட்டரி சங்க பத்ரிநாரயணகுப்தா,

லயன்ஸ் கிளப் ராமலிங்கம், விளையாட்டுத் துறை ஆசிரியா் கலைச்செல்வி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.