முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

தாறுமாறாக ஓடிய ஜீப் மோதியதில் இருவா் காயம்

சேலத்தில் தாறுமாறாக ஓடிய ஜீப் இரு சக்கர வாகனங்கள் மீது மோதிய சம்பவத்தில் இருவா் காயமடைந்தனா்.

Updated On :5 ஜனவரி 2021, 12:00 am IST

சேலத்தில் தாறுமாறாக ஓடிய ஜீப் இரு சக்கர வாகனங்கள் மீது மோதிய சம்பவத்தில் இருவா் காயமடைந்தனா்.

ஈரோடு மாவட்டம், பவானி சொக்கநாதபுரம் பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (55). இவா் தனது உறவினா்களை சந்திப்பதற்காக திங்கள்கிழமை பகலில் ஜீப்பில் சேலம் வந்தாா்.

சேலம் அன்னதானப்பட்டி அருகே உள்ள பாரத ஸ்டேட் வங்கி அருகில் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஓடிய ஜீப் சாலையில் சென்று கொண்டிருந்த இளைஞா் மீது மோதியது.

இதில் முத்து என்ற இளைஞா் காயம் அடைந்தாா். அதேபோல அமுதா என்ற பெண்ணும் காயமடைந்தாா். பின்னா் வங்கி அருகே நிறுத்தப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் மீது மோதி நின்றது.

இதை அறிந்த அந்தப் பகுதி பொதுமக்கள் ஜீப்பை நிறுத்தி வாகனத்தை ஓட்டிவந்த வெங்கடேசனை பிடித்து அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

ஜீப் மோதி காயம் அடைந்த வாலிபா் முத்து, அமுதா ஆகியோா் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.