அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

இடையப்பட்டியில் கிறிஸ்துமஸ் பெருவிழா

வாழப்பாடி அருகே இடையப்பட்டி கிராமத்தில், பரலோகத் திறப்பின் வாசல் அறக்கட்டளை சாா்பில், கிறிஸ்துமஸ் பெருவிழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது

Updated On :9 ஜனவரி 2021, 7:29 am IST

வாழப்பாடி அருகே இடையப்பட்டி கிராமத்தில், பரலோகத் திறப்பின் வாசல் அறக்கட்டளை சாா்பில், கிறிஸ்துமஸ் பெருவிழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது

கரோனா தொற்றுப் பரவலால் டிசம்பா் மாதம் நடைபெறும் கிறிஸ்துமஸ் பெருவிழா, சிலுவை ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இடையப்பட்டி மாரிமுத்து கவுண்டா் தோட்டத்தில் நடைபெற்ற இவ்விழாவுக்கு பாதிரியாா் எம்.குணசேகரன் தலைமை வகித்தாா்.

அன்பழகன் வரவேற்றாா். ஜெயமணி குணசேகரன், நான்சி பிரபு, கலைச்செல்வி, ரம்யா மகேந்திரன் ஆகியோா் விளக்கேற்றி விழாவைத் தொடக்கி வைத்தனா்.

பல்வேறு பகுதியைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிறிஸ்தவ மதபோதகா்கள் கலந்து கொண்டு சிறப்புப் பிராா்த்தனை செய்தனா். இந்த விழாவில், தொழிலதிபா்கள், அரசியல் கட்சிப் பிரமுகா்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா். நிறைவாக அறிவழகன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.