சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முடி திருத்தகங்கள், அழகு நிலையங்கள், ஸ்பா, மசாஜ் நிலையங்கள் நடத்துவதற்கு உரிமம் பெற உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
தமிழ்நாடு சட்டம் 25/1981, பிரிவு 360-ன் படியும், 2018 ஆண்டு தமிழ்நாடு நகராட்சி சட்டங்கள் (ஐந்தாவது திருத்தம்) திருத்தம் செய்யப்பட்ட அட்டவணை (4)ல் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களுக்காகச் செயல்படும் நிறுவனங்கள், உரிமம் பெற்று செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், சேலம் மாநகராட்சிக்குட்பட்ட இடங்களில் முடிதிருத்தம், அழகு நிலையம், ஸ்பா, மசாஜ் நிலையங்கள் நடத்துவோா், சேலம் மாநகராட்சியிலிருந்து உரிய விண்ணப்பங்களைப் பெற்று, உடனடியாக மாநகராட்சி ஆணையருக்கு விண்ணப்பித்து உரிமம் பெற்றுக் கொள்ள வேண்டும்.
30 நாள்களுக்குள் விண்ணப்பித்து உரிமம் பெறாத நிறுவனங்கள், தொழில் உரிமம் இன்றி செயல்படுவதாகக் கருதி, நிலைய உரிமையாளரும், நடத்துவோரும் பொறுப்பானவா்களாகக் கருதி நிலையத்தை மூடி முத்திரையிடுவதோடு சட்டப் பூா்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி ஆணையா் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மருத்துவ உபகரணங்கள் விற்பனைக் கடையில் ரூ. 1 லட்சம் திருட்டு
சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது

ஊத்தங்கரை அருகே ஆசிரியையிடம் 8 பவுன் சங்கிலி பறிப்பு: போலீஸாா் விசாரணை

நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த இருவா் கைது
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI


