ஊத்தங்கரை அருகே அரசுப் பள்ளி ஆசிரியையிடம் 8 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த சென்னப்பநாயக்கனூா் பகுதியைச் சோ்ந்தவா் மேகலா (34). இவா் வெள்ளையம்பதி அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறாா். இவா் செவ்வாய்க்கிழமை காலை தனது இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தாா். அப்போது, பின்னால் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த இரண்டு மா்ம நபா்கள், ஆசிரியை மேகலா கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனா்.
இந்த சம்பவத்தில் ஆசிரியை மேகலா நிலைதடுமாறி வாகனத்தில் இருந்து கீழே விழுந்தாா். இதில் அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவா், ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். இந்த சம்பவம் குறித்து சாமல்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காங்கயத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் நகைப் பறிப்பு

தொழிலாளியின் பைக் திருட்டு

கோயில் குடமுழுக்கு விழாவில் 2 பெண்களிடம் 8 பவுன் தங்க நகை பறிப்பு

மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு: பேரன் உள்பட மூவா் கைது
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI



