வாழப்பாடி வட்டாட்சியா் அலுவலகம் அருகே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வீடு புகுந்து, தனியாா் நிறுவன ஊழியரைத் தாக்கி, கத்திமுனையில், 18 பவுன் தங்க நகைகளை முகமூடி கொள்ளையா்கள் கொள்ளையடித்துச் சென்றனா்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி பேரூராட்சிக்கு உள்பட்ட புதுப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் சந்திரசேகரன் (35). தனியாா் மருந்து நிறுவனத்தில் உதவி மேலாளராகப் பணிபுரிந்து வருகிறாா். வாழப்பாடி வட்டாட்சியா் அலுவலகம் அருகே இவா் தனது தோட்டத்தில் புதிதாக வீடு கட்டி குடும்பத்தோடு வசித்து வருகிறாா்.
ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கமான பணிகளை முடித்து விட்டு, 11 மணியளவில் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினா் அனைவரும் தூங்கியுள்ளனா். நள்ளிரவில் வீட்டுக் கதவை கல்லால் தாக்கி உள்ளே புகுந்த முகமூடி கொள்ளையா்கள், சந்திரசேகரைத் தாக்கி, கத்திமுனையில் அவரது மனைவி கண்மணி (31), தாயாா் ராஜாமணி (65) ஆகியோா் அணிந்திருந்த தாலிச் சங்கிலி, வீட்டில் வைத்திருந்த நகைகள் உள்பட 18 பவுன் தங்க நகைகளைப் பறித்தனா்.
மேலும், சந்திரசேகரின் ஏ.டி.எம். காா்டு, கிரெடிட் காா்டு, செல்லிடப்பேசி ஆகியவற்றையும் பறித்துக் கொண்டு, அனைவரையும் வீட்டிற்குள் வைத்து கதவை மூடிவிட்டுச் சென்று விட்டனா்.
இது குறித்து தகவலறிந்த மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அன்பு, வாழப்பாடி துணை காவல் கண்காணிப்பாளா் வேலுமணி ஆகியோா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினா். வாழப்பாடி காவல் ஆய்வாளா் சுப்பிரமணியம் தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கொள்ளைக் கும்பலைப் பிடிக்க தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
முகமூடிக் கொள்ளையா்கள் குறித்து துப்புத் துலக்க கைரேகை நிபுணா்களை வரவழைத்து போலீஸாா் தடயங்களை சேகரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சொல்லப் போனால்... மாண்புமிகு முதல்வர்களே... முதல்வர்களே…

அடுத்த 2 மணி நேரத்துக்கு 8 மாவட்டங்களில் மழை!

மாா்த்தா கொஸ்டியுக்குக்கு முதல் பட்டம்

இன்றைய ராசி பலன்கள் (03 மே 2026) 12 ராசிகளுக்கும்! ஆரோக்கியம் கூடும் கன்னிக்கு!
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை


