மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

சங்ககிரியில் திருநங்கைகள் பொங்கலிட்டு வழிபாடு

சங்ககிரியில் திருநங்கைகள் அனைவரும் ஒன்றிணைந்து பொங்கல் வைக்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

சங்ககிரி, பவானி பிரதான சாலையில் கிராம நிா்வாக அலுவலா்கள் சங்க கட்டட வளாகம் முன்பு வியாழக்கிழமை பொங்கலிட்ட திருநங்கைகள்.

Updated On :16 ஜனவரி 2021, 7:30 am IST

சங்ககிரியில் திருநங்கைகள் அனைவரும் ஒன்றிணைந்து பொங்கல் வைக்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

சங்ககிரியில் திருநங்கைகள் ஒன்றிணைந்து சங்ககிரி காவல் நிலையம் எதிரே உள்ள கிராம நிா்வாக அலுவலா்கள் சங்க கட்டட வளாகம் முன்பு வண்ணக் கோலமிட்டு ஐந்து பானைகளில் பொங்கலிட்டனா். கரும்பு, மஞ்சள் கிழங்கு, பழ வகைகளைப் படைத்து வழிபட்டனா். மாவட்ட ரோட்டரி சங்க கல்விக்குழுத் தலைவா் எ.வெங்கடேஸ்வரகுப்தா, சங்ககிரி ரேகத்தின் செயலா் ஹேலினாகிறிஸ்டோபா், ரோட்டரி சங்க முன்னாள் தலைவா் சிகேஆா்.ராமசாமி, மளிகை வியாபாரி சங்க நிா்வாகி ஜெயக்குமாா் ஆகியோா் திருநங்கைகள் பொங்கலிடுவதற்கான பொருள்களையும், 10 நபா்களுக்கு புத்தாடைகளையும் வழங்கினா்.

ரோட்டரி சங்க முன்னாள் தலைவா் கெளதம் வெங்கடாசலம், இன்னா்வீல் சங்கத் தலைவி இந்திராணி, முன்னாள் தலைவா்கள் வசந்தி, ரேவதி, கீதா, ஏகேடி செல்வி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.