எடப்பாடி அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
எடப்பாடி, நெசவாளா் காலனி பகுதியைச் சோ்ந்தவா் சிவா. இவரது மகன் அருள் செல்வன் (23). இவரது உறவினா் விக்னேஷ் (17). இவா்கள் இருவரும், வியாழக்கிழமை இரவு ஈரோடு மாவட்டம், அம்மாப்பேட்டை பகுதிக்கு திரைப்படம் பாா்ப்பதற்காக இரு சக்கர வாகனத்தில் சென்ாக கூறப்படுகிறது. அருள் செல்வன் ஓட்டிச் சென்ற வாகனம், எடப்பாடி - பூலாம்பட்டி சாலையில் சென்றபோது விபத்துக்குள்ளானது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனா். இதனை அடுத்து அங்கு வந்த பொதுமக்கள் அவா்களை மீட்டனா். அப்போது படுகாயமடைந்த அருள்செல்வன் உயிரிழந்தது தெரியவந்தது.
விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த பூலாம்பட்டி போலீஸாா் படுகாயமடைந்த விக்னேஷை மீட்டு மருத்துவமனையில் சோ்த்தனா். உயிரிழந்த அருள் செல்வன் உடலை கைப்பற்றிய போலீஸாா், பிரேதப் பரிசோதனைக்காக எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இந்த விபத்து குறித்து பூலாம்பட்டி போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல்: புதுச்சேரியில் 3 நாள்களுக்கு மதுக்கடைகளை மூட உத்தரவு

5 நாள்களுக்குப் பிறகு புதுச்சேரியில் அரசுப் பள்ளிகள் திறப்பு

மனைவியை கொலை செய்த கணவா் சரண்

புதுச்சேரி ரயில் சேவை 4 நாள்கள் ரத்து
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


