Enable Javscript for better performance
The Prevention of Corruption Act, 1988ஊழல் தடுப்புச் சட்டம்,1988- Dinamani

சுடச்சுட

  

  ஊழல் தடுப்புச் சட்டம்,1988

  By வழக்கறிஞர் சி.பி. சரவணன்  |   Published on : 30th April 2018 01:15 PM  |   அ+அ அ-   |    |  

  z_correption

   

  ஊழல் தடுப்புச் சட்டம்,1988

  ஊழல் மனப்பான்மை

  1,85,591 கோடி நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு முறைகேடு,  கர்னாடகம் 2,00,000 கோடி வக்பு வாரிய நிலமோசடி, 10,000 கோடி உத்தரப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் தேசிய ஊரக சுகாதாரத் திட்டம், 1,76,000 கோடி 2G அலைக்கற்றை முறைகேடு, உத்தரப்பிரதேசம் 35,000 கோடி உணவு தானிய ஊழல், 3,500 கோடி காமன்வெல்த் விளையாட்டு ஊழல் மட்டுமன்றி பட்டா சிட்டா மாறுதல்களுக்கு வாங்கும் நூறு இருநூறு ரூபாய் ஊழல்களெல்லாம் நம் அரசியல்வாதிகள், அரசு பணியாளர்களின் அடையாளமாக ஆகிவிட்டது. 

  அக்காலங்களில் சைக்கிளில் வரும் காவலரைக் கண்டு பெரும் செல்வந்தரும் மரியாதை கொடுப்பர். இக்காலங்களில் இந்திய காவல் பணி அதிகாரிகள் கூட குற்றவாளி அல்லது ஒருவனது செல்வம் எப்படி சம்பாதிக்கப்பட்டது என பார்க்காமல் பணமு நிறைந்தவனுக்கு கொடுக்கும் மரியாதையும், சலுகைகளும் மிக அதிகம் அதனால் வந்த அவலங்களும் மிக அதிகம்.

  அரசு காரியங்களை நிறைவேற்றுவதற்குக் கொடுக்கப்படும் லஞ்சத்தொகையை விட, அரசு, மக்கள் பணிக்கு ஒதுக்கப்படும் தொகையில் முழுதாகவோ, சிறு பகுதியோ தான் மக்கள் பணிக்குச் செல்வதாக சொல்கிறார்கள்.

  ஒரு டெண்டரை எடுக்கும் போதே 20% கொடுத்து டெண்டர் எடுத்து, துறை தலைவர், பொறியாளர், உதவி பொறியாளர், அலுவல உதவியாளர், லாபம் என கொடுத்தது போக மீதி அத்திட்டத்திற்கு செலவழிக்கப் படுகிறது என்றால் அத்திட்டத்தின் நிலை என்னவாகுமோ?

  லஞ்ச, லாவண்ய வழக்குகளில் சிக்கிக் கொள்ளும் அரசு பணியாளர்களை நீதிமன்றம் விடுவித்துவிடுவதும், லஞ்சம் மற்றும் ஊழல் துறை அதிகாரிகளுக்குத் துணைபோவது, தனக்கு வரும் புகார்களை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கே தெரிவிப்பது போன்ற கேடுகளும் உண்டு.

  கவிஞர் கா.மு. ஷெரிஃபின்;

   “பணம் பந்தியிலே குணம் குப்பையிலே”

  உடுமலை நாராயண கவியின்; 

  “முட்டாப் பயலையெல்லாம் தாண்டவக்கோனே – காசு முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே” பாடல் வரிகள் சிந்திக்கத் தூண்டுகின்றன.

  உளவியல் நோக்கில் லஞ்சம் பெறுவதும், அதை ஊக்குவிப்பதும், காரியம் ஆக பிறருக்கு லஞ்சம் அளிப்பதும் மக்களிடம் உள்ள குறையே என்றால் அது மிகையாகாது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து பெரும் பங்களா, ஆடம்பரக் கார், கணக்கற்ற சொத்து சேர்ப்பவர்களை நிந்தித்தால் ஒழிய அரசியல்வாதிகள், அதிகாரிகள், இடைத்தரகர்கள் மத்தியில் ஊழல் எண்ணத்தை ஒழிக்க முடியாது. ஊழல் தடுப்புச் சட்டம்,1988 இல் உள்ள முக்கிய பிரிவுகளை மட்டும் பார்ப்போம்.
   
  ஊழல் தடுப்புச் சட்டம்,1988
  The Prevention of Corruption Act, 1988

  அரசு பணியாளர் [பிரிவு.2(c)]
  Public servant

  அரசு பணியாளர் என்பவர்;

  i.    அரசாங்கத்தின் பணியில் இருக்கும் அல்லது அதனிடம் சம்பளம் பெறும் அல்லது பொதுக்கடமை எதனையும் புரிவதற்காக அரசாங்கத்தால் கட்டணங்களாகவோ, தரகராகவோ பணியூதியம் வழங்கப்படும் நபர் எவரும்
  ii.    உள்ளாட்சி அமைப்பின் பணியில் இருக்கும் அல்லது அதனிடம் சம்பளம் பெறும் எவரும்
  iii.    மத்திய,மாகாண, மாநில சட்டத்தாலோ,அதன் வழியாலோ, நிறுவப்பட்ட கூட்டுருமத்தின் அல்லது அரசு நிறுவனத்தில் அல்லது அரசு நிதியுதவி பெறும் அமைப்பில் சம்பளம் பெறும் நபர்
  iv.    நீதிமுறை அலுவல் காரணமாக சட்டத்தால் அதிகாரமளிக்கப்பட்ட நபர்
  v.    நீதி நிர்வாகம் தொடர்பாக கலைப்பதிகாரி, சொத்துப் பேணுநர் அல்லது ஆணையர் நபர் எவரும்
  vi.    நீதிமன்றத்தால் அல்லது பொது அதிகார அமைப்பால் முடிவு செய்வதற்காக, அறிக்கை செய்வதற்காக குறித்தனுப்பப்பட்டவர்
  vii.    தேர்தல் பணிக்காக அதிகாரம் அளிக்கப்பட்ட நபர்
  viii.    பொதுக்கடமைக்காக அதிகாரம் அளிக்கப்பட்ட நபர்
  ix.    மத்திய, மாநில, மாநில சட்டத்தாலோ,அதன் வழியாலோ, நிறுவப்பட்ட கூட்டுருமத்தின் அல்லது அரசு நிறுவனத்தில் அல்லது அரசு நிதியுதவி பெற்று அவற்றில் ஈடுபட்டுள்ள ஒரு பதிவு பெற்ற கூட்டுறவு சங்க தலைவராக, செயலாளராக இருக்கும் நபர்
  x.    பணியாளர் தேர்வாணையம், வாரியம், வாரியத்தின் சார்பு தேர்வு நடத்தும் தெரிவுக்குழுவில் உறுப்பினர் எவரும்
  xi.    பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் எவரும்
  xii.    மத்திய, மாகாண, மாநில சட்டத்தாலோ, அதன் வழியாலோ, நிறுவப்பட்ட அரசு நிதியுதவி பெறும் அமைப்பில் சம்பளம் பெறும் நபர்
  ஆவார்.

  அரசுப் பணியாளர் எப்பொழுது ஊழல் குற்றம் செய்ததாக கருதப்படுவார் [பிரிவு13]
  Criminal misconduct by a public servant
   

  அ) அரசுப் பணியாளர் அ) தமக்காகவோ அல்லது வேறு யாருக்காகவோ பணி சட்டப்படியான பணிஊதியம் அல்லாத கைக்கூலி எதிலாகிலும் தூண்டுகோலாகவோ வெகுமதியாகவோ எவரிடமிருந்தும் வாடிக்கையாக ஏற்பாராயின் அல்லது கேட்டுப்பெறுவாராயின், ஏற்க உடன்படுவாராயின் அல்லது கேட்டு பெறுவதற்கு முயல்வாராயின் 

  ஆ) தம்மால் செய்யப்பட்டிருக்கிற அல்லது செய்யப்படவிருக்கிற நடவடிக்கை அல்லது எதனோடும் தொடர்பு கொண்டிருக்கிற அல்லது தொடர்புடையவராக அநேகமாகத தொடர்பு கொண்டிருந்திருக்கக் கூடுமென்று தாம் அறிந்துள்ள அல்லது தம்முடைய அல்லது தாம் எவர் கீழ் பணிபுரிகிறாரோ அந்த அரசுப் பணியாளருடைய அலுவல்முறைப் பதவிப் பணிகளுடன் தொடர்பு எதுவுமுடைய எவரிமிருந்துதேனும் தமக்காகவோ அல்லது வேறு யாருக்காகவோ மறு பயனுக்காகவோ விலையுயர்ந்த பொருள் எதையேனும் வழக்கமாக தாம் ஏற்பாராயின் அல்லது கேட்டுப் பெறுவாராயின் அல்லது ஏற்க உடன்படுவாராயின் அல்லது கேட்டுப்பெற முயல்வாராயின்

  இ) அரசுப் பணியாளர் என்ற முறையில் தம்மிடம் அல்லது தம் கட்டாளுகையின் கீழ் ஒப்படைக்கப்பட்ட சொத்து எதனையும் நேர்மையற்ற முறையிலோ அல்லது மோசடியாகவோ தாம் கையாடல் செய்வாராயின் அல்லது பிறவாறு தமது சொந்த பயனுக்காக மாற்றிக் கொள்வாராயின் அல்லது பிறர் எவரையும் அவ்வாறு செய்ய அனுமதிப்பாராயின் அல்லது

  ஈ)
  I.     ஊழலான அல்லது சட்டமுரணான வழிகளின் மூலமாகத் தமக்காகவோ அல்லது வேறு யாருக்காகவோ விலையுயர்ந்த பொருள் அல்லது பணமதிப்புள்ள பயன் எதனையும் பெறுவாராயின் அல்லது

  II.    அரசுப் பணியாளார் என்ற தமது பதவி நிலையைத் தவறாகப் பயன்பபடுத்துவதன் மூலமாகத் தமக்காகவோ அல்லது வேறு யாருக்காகவோ விலையுயர்ந்த பொருள் அல்லது பணமதிப்புள்ள பயன் எதனையும் பெறுவாராயின், அல்லது

  III.    அரசுப் பணியாளராக பதவி வகிக்கும் போது பொது நலன் ஏதுமின்றி எவருக்காகவும் விலையுயர்ந்த பொருள் அல்லது பணமதிப்புள்ள பயன் எதனையும் கேட்டுப் பெறுவாராயின், அல்லது
  அவரோ, அவர் சார்பில் வரும் எவருமோ, அவருடைய வருமானத்தின் தெரிநிலையான வழிவகைகளுக்குப் பொருந்தாத விகிதத்தில் பணம் தொடர்பான வழிவகைகளையோ அல்லது சொத்தையோ உடைமையில் கொண்டிருந்த அல்லது பதவி காலத்தில் கொண்டிருந்து, அதற்கு தெளிவுறக் கணக்கு காட்ட முடியவில்லையாயின் குற்றச் செயலை செய்ததாக சொல்லப்படுவார்.

  அரசு பணியாளர் கைகூலி பெறுதல் [பிரிவு.7]

  அரசு பணியாளர் எவரிடமும்  அத்தகைய அரசுப் பணியாளர் என்ற முறையில் அலுவல்முறைச் செயல் எதனையும் செய்ய அல்லது செய்யாமல் விட அல்லது எவருக்கேனும் சலுகையோ, சலுகையின்மையோ காட்ட அல்லது காட்டாமல் விட அல்லது நன்மை அல்லது தீமை செய்வதற்கு அல்லது செய்ய முயல்வதற்கு வெகுமதியாக தமக்காகவோ, வேறு எவருக்கோ கைக்கூலி எதையாகிலும் ஏற்பாராயின் அல்லது கெட்டுப்பெற முயல்வாராயின் அவர் ஆறுமாதங்களுக்கு குறையாத ஐந்து ஆண்டுகள் வரை நீடிக்கலாகும் சிறைதண்டனையும் அபராதமும் விதித்து தண்டிக்கப்படத்தக்கவர் ஆவார்.

  விளக்கங்கள்...

  அ)அரசு பதவியை வகிக்க போவதாக நம்பச் செய்து ஏமாற்றி கைகூலி பெற்றால் இப்பிரிவில் வரையரை செய்யப்பட்டுள்ள குற்றத்தை செய்தவராகார்.

  ஆ)கைக்கூலி என்பது பணத்தால் மதிப்பிடத்தக்க கைகூலியை மட்டுமே குறிப்பதன்று.

  இ)சட்டப்படியான பணியூதியம் என்பது அரசால் அல்லது நிறுவனத்தால் அனுமதிக்கப்படுகின்ற பணியூதியங்கள் அனைத்தும் அடங்கும்

  ஈ)’செய்வதற்கு தூண்டுகோல் அல்லது வெகுமதி” என்பது கைகூலியை பெற்றுக்கொள்கிறவரை குறிக்கும்

  உ)அரசாங்கத்துடன் தனக்குள்ள செல்வாக்கு, அந்த நபரை நம்பி கைகூலி கொடுப்பதற்கு தூண்டுவதால் அவர் குற்றம் செய்தவராகிறார்.

  அரசு பணியாளர் ஊழல் அல்லது சட்டவிரோதமான வழிகளில் கைகூலி பெறுதல்[பிரிவு.8]

  அரசுப் பணியாளர் எவரும் பிரிவு.7-இல் குறிப்பிடப்பட்டுள்ள செயலை செய்ய வெகுமதியாக தமக்காகவோ, வேறு எவருக்கோ ஊழல் அல்லது சட்டவிரோதமாக கைக்கூலி எதையாகிலும் ஏற்பாராயின் அல்லது கேட்டுப்பெற முயல்வாராயின் அவர் ஆறுமாதங்களுக்கு குறையாத ஐந்து ஆண்டுகள் வரை நீடிக்கலாகும் சிறைதண்டனையும் அபராதமும் விதித்து தண்டிக்கப்படத்தக்கவர் ஆவார்.

  அரசு பணியாளர் சொந்த செல்வாக்கை செலுத்த கைகூலி பெறுதல்[பிரிவு.9]
  Taking gratification, for exercise of personal influence with public servant 

  அரசுப் பணியாளர் எவரும் பிரிவு.7-இல் குறிப்பிடப்பட்டுள்ள செயலை செய்ய வெகுமதியாக தமக்காகவோ, வேறு எவருக்கோ தன் சொந்த செல்வாக்கை செலுத்த வெகுமதியாக தமக்காகவோ, வேறு எவருக்கோ கைக்கூலி எதையாகிலும் ஏற்பாராயின் அல்லது கேட்டுப்பெற முயல்வாராயின் அவர் ஆறு மாதங்களுக்கு குறையாத ஐந்து ஆண்டுகள் வரை நீடிக்கலாகும் சிறைதண்டனையும் அபராதமும் விதித்து தண்டிக்கப்படத்தக்கவர் ஆவார்.

  ஊழல் குற்றச் செயலுக்கு அரசு பணியாளர் உடந்தையாயிருப்பதற்கு தண்டணை [பிரிவு.10]

  அரசு பணியாளராய் இருந்து ஊழல் அல்லது சட்டவிரோதமான வழிகளில் கைகூலி பெறவும், சொந்த செல்வாகை செலுத்த கைகூலி பெறவும் உடந்தையாயிருப்பவருக்கு அவர் ஆறு மாதங்களுக்கு குறையாத ஐந்து ஆண்டுகள் வரை நீடிக்கலாகும் சிறைதண்டனையும் அபராதமும் விதித்து தண்டிக்கப்படத்தக்கவர் ஆவார்.

  விலைமதிப்புள்ள பொருளை பெறுதல் [பிரிவு.11]

  அரசுப் பணியாளர் எவரும் பிரிவு.7-இல் குறிப்பிடப்பட்டுள்ள செயலை செய்ய வெகுமதியாக தமக்காகவோ, வேறு எவருக்கோ தன் சொந்த செல்வாக்கை செலுத்த வெகுமதியாக தமக்காகவோ, வேறு எவருக்கோ விலை உயர்ந்த பொருள் எதையாகிலும் ஏற்பாராயின் அல்லது கேட்டுப்பெற முயல்வாராயின் அவர் ஆறு மாதங்களுக்கு குறையாத ஐந்து ஆண்டுகள் வரை நீடிக்கலாகும் சிறைதண்டனையும் அபராதமும் விதித்து தண்டிக்கப்படத்தக்கவர் ஆவார்.

  பிரிவு.7இல் அல்லது 11-இல் வரையரை செய்யப்பட்ட குற்ற செயல்களுக்கு உடந்தையாயிருத்தல்[பிரிவு.12]

  பிரிவு.7இல் அல்லது 11-இல் வரையரை செய்யப்பட்ட குற்ற செயல்களுக்கு உடந்தையாயிருப்பவருக்கு அவர் ஆறு மாதங்களுக்கு குறையாத ஐந்து ஆண்டுகள் வரை நீடிக்கலாகும் சிறைதண்டனையும் அபராதமும் விதித்து தண்டிக்கப்படத்தக்கவர் ஆவார்.

  குற்றச் செயலை செய்வதை வழக்கமாகக் கொண்டித்தல்[பிரிவு.14(ஆ)

  பிரிவு 8,9,12 இன் படி குற்றச் செயலை செய்வதை வழக்கமாகக் செய்கிற எவரும் 2 ஆண்டுக்கு குறையாத 7 ஆண்டுகள் வர நீடிக்கலாகும் சிறைதண்டணையும் அபராதத்திற்கும் உள்ளாக்கப்படுவார்.

  அபராதம் நிர்ணயப்பதற்கு கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியவை[பிரிவு.16]

  அபராதம் நிர்ணயப்பதற்கு முன் குற்றஞ்சாட்டப்பட்டவர் அக்குற்றச் செயலை இழைத்ததன் மூலம் பெற்றிருக்கும் சொத்தின் மதிப்பினையும், கணக்கு காட்ட இயலாமலிருக்கும் சொத்தையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்

  குற்ற முயற்சிக்குத் தண்டணை[பிரிவு.15]

  ஊழல் குற்றச் செயலை இழைக்க முயல்கிற எவரொவரும், மூன்றாண்டுகள் வரை நீட்டிக்கலாகும் சிறை தண்டணையும் அபராதமும் விதித்து தண்டிக்கப்படுவார்.

  ஊழல் புகார்களை அளிக்க முன்வரும் பொதுமக்கள் கீழ்க்கண்ட முகவரிகளுக்கு தங்களது புகார்களை அனுப்பலாம்.

  CENTRAL VIGILANCE COMMISSION
  Satarkata Bhavan , A-Block
  GPO Complex , INA
  New Delhi - 110 023 

  THE DIRECTORATE OF VIGILANCE AND ANTI-CORRUPTION
  NCB 21 TO 28, P.S.KUMARASAMY RAJA SALAI (GREENWAYS ROAD),
  RAJA ANNAMALAIPURAM,
  CHENNAI – 600 028.
  Telephone : 91-44-24615929 / 24615949 / 24615989 / 24954142 / 9445048999 / 9445048990

  kattana sevai