Enable Javscript for better performance
Medical Termination of Pregnancy Act,1971|மருத்துவ கருக்கலைப்பு சட்டம் 1971- Dinamani

சுடச்சுட

  
  000000000abortionabortion


  கருக்கலைப்பு (Abortion) என்பது முளையம் (embryo) அல்லது முதிர்கரு (fetus) கர்ப்பிணிப் பெண்ணின் கருப்பைக்கு வெளியே இருக்கும்போது உயிர்வாழக் கூடிய தன்மையை அடைவதற்கு முன்னர், அதனை கருப்பையிலிருந்து அகற்றி அதனை அழித்துவிடுதல் ஆகும். 

  மற்ற எந்த உயிரினங்களும் செய்யாத ஒன்றை மனிதன் செய்வதே கருக்கலைப்பு, கேட்டால் ஆறறிவு என்பான். 

  இவ்வாறான வேலையில், கற்பழிப்பு மூலம் உருவானது மற்றும் இயல்புக்கு மாறான வளர்ச்சி கொண்ட கரு போன்றவை 20 வாரத்துக்கும் மேற்பட்ட வளர்ச்சி கொண்டிருந்தாலும் அவற்றை கலைக்க அனுமதி அளிப்பது தொடர்பாக மேற்படி சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என கர்நாடகாவைச் சேர்ந்த அனுஷா ரவீந்திரா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

  இத்தகைய விதிவிலக்கான வழக்குகளில் 20 வாரத்துக்கு மேற்பட்ட வளர்ச்சி கொண்ட கருவை கலைப்பதற்கு அனுமதி அளிப்பது தொடர்பாக நிரந்தர வழிமுறையை உருவாக்குவதற்கான குழு ஒன்றையும் அமைக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

  இந்த வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு விசாரித்து மேற்படி நிரந்தர வழிமுறைகளை உருவாக்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பது தொடர்பாக 4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு மத்திய சுகாதாரம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துக்கும், இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும் அறிவுறுத்தி உள்ளது.
  எனினும் இந்த விவகாரத்தில் இந்திய கருக்கலைப்பு சட்டம் 1971 ல் திருத்தம் மேற்கொள்ள சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது. இந்திய கருக்கலைப்பு சட்டம் 1971  என்ன சொல்கிறது எனப் பார்ப்போம்

  மருத்துவ கருக்கலைப்பு சட்டம் 1971
  (Medical Termination of Pregnancy Act,1971)

  சில வகை கர்ப்பங்களை பதிவு பெற்ற மருத்துவர் கலைப்பதற்காகவும் இதன் சம்மந்தமாகவும் உடன் நிகழ்வாகவும் எழும் சங்கதிகளுக்கு வரையறை செய்யப்பட்ட சட்டம்.

  இந்தியா குடியரசானதன் பின் 22 ஆம் ஆண்டு இச்சட்டம் இயற்றப்பட்டது

  1.குறுந்தலைப்பு, அளாவுகை, துவக்கம் 

  • i.இந்தச் சட்டம் மருத்துவ கருக்கலைப்பு சட்டம் 1971 என அழைக்கப்படுகிறது.
  • ii.இது ஜம்மு காஷ்மீர் மாநிலம் தவிர இந்தியா முழுமைக்கும் பொருந்தும்.
  • iii.இந்திய அரசிதழில் இதற்கென அறிவிக்கை செய்யும் அந்நாளிலிருந்து இது அமுலுக்கு வரும்.

  2.சொற்பொருள் விளக்கம்

  இச்சட்டத்தில் அவ்வேளைக்கு வேறு விதத்தில் தேவைப்பட்டாலன்றி.

  • a. காப்பாளர் என்பதன் பொருள் மன நோய் குறைபாடுடைய குழந்தை அல்லது இளவல் நபர் ஒருவரை காக்கும் பொறுப்புடைய நபர் என்பதைக் குறிக்கும்.
  • b. மன நோய் குறைபாடுடைய குழந்தை என்பது மன வளர்ச்சி குன்றியவரை தவிர மன சீர்குலைவின் காரணமாக சிகிச்சை தேவைப்படும் ஒரு நபரை குறிக்கும்.
  • c. இளவல் என்பது இந்திய மெஜாரிட்டி சட்டம் 1975-ன் சாரத்தின்படி மெஜாரிட்டி அடையாதவரை குறிக்கும்.
  • d. பதிவு பெற்ற மருத்துவர் என்பது இந்திய மருத்துவ கவுன்சிலின் சட்டம் 1956 ன் பிரிவு 2(h)ன் படி விளக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ தகுதியை உடையவரும் மாநில மருத்துவ பதிவேட்டில் பதிவு பெற்ற ஒருவரையும் பெண்கள் தொடர்பான நோய் இயல் மற்றும் தாய்மைப்பேறு மருத்துவத்தில் பயிற்சி பெற்ற இச்சட்டத்தின் விதிகளின்படி குறித்தவாறுள்ள நபரைக் குறிக்கும்.

  3. ஒரு பதிவு பெற்ற மருத்துவர் எப்போது கருக்கலைப்பு செய்யலாம்?.

  • 1. இந்திய தண்டனை சட்டத்தில் (45/1860) கூறியுள்ள விதிகளுக்கு முரண்படாதவாறு ஒரு பதிவு பெற்ற மருத்துவரால் இச்சட்டத்தின் ஷரத்துக்கள் படி செய்யப்படுகின்ற கருக்கலைப்பு இந்திய தண்டனை சட்டத்தின்படியோ செயலில் உள்ள வேறு சட்டத்தின் படியோ குற்றமாகாது.
  • 2. உட்பிரிவு (4)-ன் படி வாசகங்களுக்கு உட்பட்டு ஒரு பதிவு பெற்ற மருத்துவர் கீழ்கண்ட சந்தர்ப்பங்களில் கருக்கலைப்பு செய்யலாம்.
  • a. கருவின் கர்ப்ப காலம் 12 வாரத்திற்கு மிகாமல் இருக்கும் போது பதிவு பெற்ற மருத்துவர் ஒருவர்
  • b. கருவின் கர்ப்ப காலம் 12 வாரத்திற்கு அதிகமாகவும் 20 வாரங்களுக்கு குறைவாகவும் இருக்கும் போது.

  பதிவு பெற்ற மருத்துவர் இருவர்;

  • i.அந்த கருகர்ப்பத்தில் தொடர்வதால் கர்ப்பமுற்றிருக்கும் பெண்ணின் உடல் ரீதியாக அல்லது மன ரீதியாக கொடுங்காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என கருதினால்
  • ii.அந்த குழந்தை பிறந்தால் உடல் ரீதியாக அல்லது மன ரீதியாக பெருந்தீங்கு ஏற்படும் என்று நன்னம்பிக்கையின் அடிப்படையில் கருதினால் கருக்கலைப்பு செய்யலாம்.

  விளக்கம்:  கற்பழிப்பு செய்ததால் ஒரு பெண் கர்ப்பமுற்றால் அக்கர்ப்பதால் அடையும் கடுமையான மன துயரம் அப்பெண்ணின் மன நலத்திற்கு கொடுங்காயம் விளைவிக்கும் என அனுமானிக்கலாம்.

  விளக்கம்:  குடும்பத்தில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்காக குடும்ப கட்டுப்பாட்டு சாதனங்களை கணவனோ, மனைவியோ பயன்படுத்தி அதில் தோல்வி ஏற்பட்டு உருவாகும் வேண்டத்தகாத கர்ப்பம்... கர்ப்பமுற்ற பெண்ணின் மன நலத்திற்கு கொடுங்காயம் விளைவிக்கும் என அனுமானிக்கலாம்

  3. இரண்டாவது உட்பிரிவில் சொல்லப்பட்டபடி கர்ப்பம் தொடர்வது ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிக்கும் அபாயம் உள்ளதா எனத் தீர்மானிக்கும் போது அப்பெண்ணின் உண்மையான அல்லது முன் கூட்டி அறியக் கூடிய சூழ்நிலைகளை மனதில் கொள்ள வேண்டும்.

  4. 

  • (a) 18 வயதிற்கு மிகாத பெண்ணின் கர்ப்பத்தையும், மன நோய் குறைபாடுடைய 18 வயதிற்கு அதிகமான வயதுடைய பெண்ணின் கர்ப்பத்தையும் காப்பாளரின் எழுத்துப் பூர்வமான சம்மதத்தினை பெற்று பின்னரே கருக்கலைப்பு செய்யப்பட வேண்டும்.
  • (b) மேலே சொல்லப்பட்ட சந்தர்ப்பங்கள் தவிர வேறு சந்தர்ப்பங்களில் பெண்ணின் சம்மதமின்றி கருக்கலைப்பு செய்யக் கூடாது.

  4. கருக்கலைப்பு எந்த இடத்தில் செய்யப்பட்ட வேண்டும் 

  இச்சட்டத்தின் படியான கருக்கலைப்பு கீழ்கண்ட இடங்கள் தவிர மற்ற இடங்களில் நடைபெறக் கூடாது.

  a.அரசால் பராமரிக்கப்படும் மருத்துவமனை

  தலைமை மருத்துவ அதிகாரி அல்லது மாவட்ட சுகாதார அலுவலரை தலைவராக கொண்ட மாவட்ட கமிட்டி அல்லது அரசாங்கம் இச்சட்டத்தின் பயன்பாட்டிற்காக ஒப்புதல் அளித்துள்ள இடம். அந்த மாவட்ட கமிட்டி தலைவரை சேர்த்து 3-க்கு குறையாது 5-க்கு அதிகப்படியாக இல்லாத உறுப்பினர்களைக் கொண்டு அரசாங்கம் அவ்வப்போது இதற்கென குறிப்பிட்டுள்ள போதிய மருத்துவப் பாதுகாப்புள்ள இடங்களில் இருக்க வேண்டும்.

  பிரிவு 5  

  பிரிவு 3-ம் 4-ம் எப்போது பொருந்தாது?

  • 1. பிரிவு 4 மற்றும் பிரிவு 3 (2)-ன் வாசகங்கள் கர்ப்ப காலத்தில் நீட்சியையும் பதிவு பெற்ற மருத்துவரின் கருத்தின்படியும் செய்யப்படுவதென்பது எப்போது பொருந்தாது எனில் அந்த பதிவு பெற்ற மருத்துவர் தன்னம்பிக்கையின் அடிப்படையில் அந்த பெண்ணின் உயிரைக் காப்பாற்ற அப்படிப்பட்ட கருக்கலைப்பு அவசியம் என கருதுவாரேயாயின் மேற்கண்ட பிரிவுகளில் காணும் வாசகங்கள் பொருந்தாது.
  • 2. இந்திய தண்டனை சட்டம் (45/1860)-க்கு முரண்படாதவாறு பதிவு பெறாத மருத்துவரால் செய்யப்படுகிற கருக்கலைப்பு இரண்டு ஆண்டுகளுக்கு குறைவில்லாமலும் ஏழு ஆண்டு வரையிலும் கடுங்காவலாக தண்டிக்கப்படத்தக்க குற்றமாகும். இந்த சட்டம் இந்த அளவுக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
  • 3. எவரேனும் 4-வது பிரிவு கூறு(a)-ன் படி ஒப்புதல் அளிக்கப்படாத வேறு இடத்தில் வைத்து கருக்கலைப்பு செய்வாரேயானால் அவரும் இரண்டு ஆண்டு முதல் ஏழு ஆண்டு வரை கடுங்காவலாக தண்டிக்கப்படக் கூடியவர் ஆவர்.
  • 4. அவ்வாறு ஒப்புதலளிக்கப்படாத இடத்தில் கருக்கலைப்பு செய்யப்பட்டால் அந்த இடத்தின் உரிமையாளரும் இரண்டு ஆண்டு முதல் ஐந்து ஆண்டு வரையில் தண்டிக்கப்படக் கூடியவராவர்.

  6. விதிகள் உருவாக்கும் அதிகாரம்... 
      1. இந்த சட்டத்தின் பயன்களை சென்றடைய செய்வதற்காக தக்க விதிகளை அரசிதழில் அறிவிக்கை செய்வதன் மூலம் விதிகளை உருவாக்க அதிகாரம் உண்டு.
      2. அவை மேலே கூறப்பட்டுள்ள அதிகாரத்திற்கு குந்தகம் விளைவிக்காத வகையில் கீழ்காண்பவைகளுக்காக உருவாக்கப்படும்.

  •     a. கருக்கலைப்பு செய்ய விரும்பும் ஒரு பதிவு பெற்ற மருத்துவர் பெற்றிருக்க வேண்டிய அனுபவம் மற்றும் பயிற்சி அல்லது இரண்டும் குறித்து.
  •     b. தேவைப்படும் மற்ற விசயங்களுக்காகவும் இதற்கென இச்சட்டப்படி உருவாக்கப்பட்ட விதிகள் வரைமுறை செய்தவாறும்

  3. அவ்வாறு உருவாக்கப்பட்ட விதிகளை மத்திய அரசு அவை உருவாக்கப்பட்ட உடன் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் அதன் ஒப்புதலுக்காக வைக்க வேண்டும். நடைபெறும்  கூட்டத் தொடரிலோ அல்லது அதற்கடுத்தாற்போல் நடைபெறும் கூட்டத் தொடரிலோ வைக்கப்படும் அவ்விதிகள் குறித்து பாராளுமன்றம் ஏதாவது மாறுதல்கள் தெரிவித்திருப்பின் அம்மாறுதல்களுடனும் மாறுதல் தேவையில்லையென கருதினால் மாறுதல் இல்லாமலும் ஏற்கனவே அவ்விதியின் கீழ் செய்யப்பட்டவைகளுக்கு குந்தகம் விளைவிக்காமலும் நடைமுறைக்கு வரும்.

  7.1 ஒழுங்குமுறைகளை ஏற்படுத்தும் அதிகாரம்... 

  • 1. மாநில அரசு தான் ஏற்படுத்தும் ஒழுங்குமுறைகளால் பிரிவு 3(2)-ன் கீழ் ஒரு மருத்துவர் கொள்ளக் கூடிய கருத்தை குறிப்பிட்ட படிவத்தில் நேரத்தில் ஒழுங்குமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறும் சான்றிதழை பாதுகாப்பது அகற்றுவது போன்றவைகளுக்கு வகை செய்யலாம்.
  • 2. ஒழுங்கு முறையில் தெரிவிக்கப்பட்டவாறு ஒரு மருத்துவர் தான் செய்யும் கருக்கலைப்பு பற்றிய தகவலை கருக்கலைப்பு தொடர்பான மற்ற தகவலை தரச் சொல்லலாம்.

  3. ஒழுங்குமுறையில் தெரிவிக்கப்பட்டவாறு குறிப்பிட்ட நபர்கள் தவிர மற்றவர்களுக்கு தகவல் அளிப்பதை தடுத்தும் தெரிவிக்கப்பட்ட கொடுக்கப்பட்ட தகவல் குறித்தும் விதிகளை ஏற்படுத்தலாம்.

  2. உட்பிரிவு 1(டி)ன்படி தகவல் அளிக்கப்பட வேண்டியவர் மாநிலத்தின் தலைமை அதிகாரி மருத்துவ மதிகாரி ஆவார்.
  2. a) அவ்வாறு செய்யப்பட்ட மாநில அரசின் ஒழுங்குமுறைகள் உடனடியாக மாநில சட்ட சபையின் ஒப்புதலுக்கு வைக்கப்பட வேண்டும்.
  3. வேண்டுமென்றே (1)வது விதியில் சொல்லப்பட்டுள்ளவைகளை மீறுபவர்கள் 1000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டு தண்டிக்கப்படலாம்.

  8. தன்னம்பிக்கை அடிப்படையிலான செயல்களுக்குப் பாதுகாப்பு... 

  சிவில் மற்றும் சட்ட நடவடிக்கைகள் எதுவும் பதிவு பெற்ற ஒரு அரசு மருத்துவரால் அச்சட்டத்தின்படி நன்னம்பிக்கையில் செய்கிற அல்லது செய்யவிருக்கிற செயல்களால் ஏற்பட்ட ஏற்படவிருக்கிற நஷ்டங்களுக்கு என எடுக்க முடியாது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai