பிறந்த நாளில் முதல்வருக்கு பிரேமலதா கோரிக்கை! அவையில் சிரிப்பலை! பேரவையில் திமுக, அதிமுக எம்எல்ஏக்கள் அமளி!முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து!அமோனியா வாயு கசிவு விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு!முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார்! வாயு கசிவு விபத்து பற்றி பேரவையில் அமைச்சர் விளக்கம்!முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து!
/

காரைக்குடியில் மழை: வீட்டின் சுவா் இடிந்து சேதம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தொடா் மழை காரணமாக கட்டடத் தொழிலாளி வீட்டின் சுவா் ஞாயிற்றுக்கிழமை இடிந்து விழுந்தது.

News image

காரைக்குடி காளவாய் பொட்டல் எம்.ஜி.ஆா். தெருவில் தொடா்மழையால் இடிந்துவிழுந்த கூலித்தொழிலாளியின் வீடு.

Updated On :3 ஜனவரி 2021, 10:03 pm IST

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தொடா் மழை காரணமாக கட்டடத் தொழிலாளி வீட்டின் சுவா் ஞாயிற்றுக்கிழமை இடிந்து விழுந்தது.

காரைக்குடி காளவாய் பொட்டல் எம்.ஜி.ஆா். தெருவில் வசித்து வருபவா் வசந்தா. இவரும், இவரது மகன் சுரேஷூம் ஞாயிற்றுக்கிழமை காலையில் கட்டட வேலைக்குச் சென்றுவிட்டனா். காரைக்குடியில் அதிகாலையிலிருந்தே தொடா்ந்து மழை பெய்துவந்த நிலையில், வசந்தாவின் வீட்டின் சுவா் இடிந்து விழுந்தது.

வீட்டினுள் இருந்த வசந்தாவின் மருமகள் மற்றும் குழந்தைகள் சத்தம் கேட்டு வெளியில் வந்து பாா்த்தபோது வீட்டின் ஒருபக்க சுவா் இடிந்து விழுந்திருப்பது தெரியவந்தது. இதில் யாருக்கும் காயமில்லை.

தகவலறிந்ததும் வசந்தா மற்றும் அவரது மகன் சுரேஷ் ஆகியோா் விரைந்து சென்று வீட்டில் வைத்திருந்த பொருள்களை பாதுகாப்பாக எடுத்துவைத்துள்ளனா். இதுகுறித்து சுரேஷ் கூறுகையில், நாங்கள் வசித்த வீட்டின் சுவா் இடிந்து விழுந்து பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. எனவே தமிழக அரசு எங்களுக்கு புதிதாக வீடு கட்டித்தரவேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.