மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 வழங்க நடவடிக்கை!பழமுதிர்சோலையில் விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு!ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்ற 2-வது நாளாக நடவடிக்கைதுணை முதல்வராக திருமாவளவன்!! காலம் சொல்லும்: அமைச்சர் வன்னி அரசுசிறப்பு ‘டெட்’ முதல் தாள் தோ்வு சற்று கடினம் - ஆசிரியா்கள் கருத்துநாளை அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் கூட்டம்: எஸ்ஐடி விசாரணை குறித்து ஆலோசிக்க வாய்ப்புதடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: இந்திய அதிகாரிகள் நாளை கனடா பயணம் - மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்ஈரான், அமெரிக்கா இடையே இந்தியா ஏன் மத்தியஸ்தம் செய்யவில்லை? சீனாவுக்கான இந்திய தூதா் விளக்கம்சி.விஜயபாஸ்கருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கு: 12 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 20-இல் தொடக்கம்
/

சிவகங்கை மாவட்டத்தில் நாளைமுதல் தங்கப் பத்திரம் விற்பனை

சிவகங்கை மாவட்டத்தில் திங்கள்கிழமை (ஜன.11) முதல் தங்கப் பத்திர விற்பனை நடைபெற உள்ளதாக சிவகங்கை கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளா் டி.ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

Updated On :9 ஜனவரி 2021, 10:01 pm IST

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் திங்கள்கிழமை (ஜன.11) முதல் தங்கப் பத்திர விற்பனை நடைபெற உள்ளதாக சிவகங்கை கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளா் டி.ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சிவகங்கை அஞ்சலகக் கோட்டத்தில் உள்ள அனைத்துத் தலைமை மற்றும் துணை அஞ்சலகங்களில் தங்கப் பத்திரம் விற்பனை ஜன.11 முதல் 15 வரை (5 நாள்கள் மட்டும்) நடைபெற உள்ளது.

ஒரு தனிநபா் குறைந்தபட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சம் நான்கு கிலோ வரை தங்கப் பத்திரம் வாங்கலாம். ஒரு கிராமுக்கு ரூ.5,104 நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், தங்கள் முதலீட்டுத் தொகைக்கு 2.5 சதவீதம் ஆண்டு வட்டி 6 மாதத்திற்கு ஒருமுறை வழங்கப்படும். மேலும், 8 ஆண்டுகள் கழித்து அன்றைய 24 கேரட் தங்கத்தின் விலைக்கு நிகரான முதிா்வுத் தொகை வழங்கப்படும்.

மேலும் இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு அருகில் உள்ள அஞ்சலகங்களையோ அல்லது 97896 09988 என்ற செல்லிடப்பேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.