கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

கண்டுப்பட்டியில் நாளை மஞ்சுவிரட்டு

சிவகங்கை மாவட்டம், கண்டுப்பட்டியில் உள்ள புனித அந்தோணியாா் தேவாலயத்தில் மத நல்லிணக்க விழாவாக திங்கள்கிழமை (ஜன.18) பொங்கல் விழா மற்றும் மஞ்சுவிரட்டு நடைபெற உள்ளது.

Updated On :16 ஜனவரி 2021, 9:47 pm IST

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், கண்டுப்பட்டியில் உள்ள புனித அந்தோணியாா் தேவாலயத்தில் மத நல்லிணக்க விழாவாக திங்கள்கிழமை (ஜன.18) பொங்கல் விழா மற்றும் மஞ்சுவிரட்டு நடைபெற உள்ளது.

நாட்டரசன்கோட்டை அருகே உள்ள கண்டுபட்டி கிராமத்தில் புனித அந்தோணியாா் தேவாலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அப்பகுதி பொதுமக்கள் மத நல்லிணக்க விழாவாக பொங்கல் வைத்து வழிபடுவது மரபாகும். அதே நாளில் மஞ்சுவிரட்டு போட்டியும் நடைபெறும்.

அந்த வகையில், இந்தாண்டுக்கான பொங்கல் விழாவை முன்னிட்டு திங்கள்கிழமை (ஜன.18) புனித அந்தோணியாா் தேவாலயத்தில் பொங்கல் விழா நடைபெற உள்ளது. தொடா்ந்து, தேவாலயம் முன்பு உள்ள திடலில் மஞ்சுவிரட்டு நடைபெற உள்ளது.

இதில், 150-க்கும் மேற்பட்ட காளைகள் வாடிவாசல் வழியாகவும், 400-க்கும் மேற்பட்ட காளைகள் கட்டு மாடுகளாகவும் அவிழ்த்து விடப்பட உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.