06.11.1860: ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக வெற்றி பெற்ற தினம் இன்று!

ஆபிரகாம் லிங்கன் 1809 ஆம் ஆண்டு பிப்ரவரி 12ந் தேதி அமெரிக்காவின் கெண்டக்கியில் ஓர் ஏழை குடும்பத்தில் பிறந்தார்.
06.11.1860: ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக வெற்றி பெற்ற தினம் இன்று!

ஆபிரகாம் லிங்கன் 1809 ஆம் ஆண்டு பிப்ரவரி 12ந் தேதி அமெரிக்காவின் கெண்டக்கியில் ஓர் ஏழை குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை தாமஸ் லிங்கன் ஒரு தச்சர். தாயார் நான்சி ஹாங்க்ஸ். லிங்கனுக்கு 9 வயது இருக்கும்போது தாய் இறந்து போனதால், சிற்றன்னையால் லிங்கன் வளர்க்கப்பட்டார். குடும்ப ஏழ்மை காரணமாக லிங்கனால் சரியாக படிக்க முடியவில்லை.

அப்போதைய அமெரிக்க சமூகத்தில் நிலவி வந்த வெள்ளையார்-கறுப்பர் இடையேயான வேறுபாடு மற்றும் அடிமை முறை ஆகியவற்றை லிங்கன் முற்றிலுமாக எதிர்த்தார். அரசியலில் ஈடுபடுவதன் மூலமே அடிமைத்தனத்தை ஒழிக்க முடியும் என்ற முடிவுக்கு லிங்கன் வந்தார். அதன்படி 1834 ஆம் ஆண்டு தமது 25 ஆவது வயதில் முதன் முதலாக இலினோய் மாநில சட்டமன்றப் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிப்பெற்றார். அடுத்து அமெரிக்க செனட்டுக்கு தேர்தல் நடந்தது. லிங்கனின் அணுகுமுறை அமெரிக்க மக்களிடத்தில் எழுச்சியை உண்டாக்கியது. தேர்தல் முடிவு லிங்கனுக்கு சாதகமாக அமைந்தது. முதன் முதலாக லிங்கன் அமெரிக்க செனட்டுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதன்பிறகு அரசியலைவிட்டு விலகி 5 ஆண்டுகள் தனியார் துறையில் வழக்குரைஞராகப் பணியாற்றினார். 1854 ல் லிங்கன் மீண்டும் அரசியலில் நுழைந்தார்.

அதற்கு பிறகு லிங்கன் அரசியலில் கடுமையாக உழைத்தார். 1860 ஆம் ஆண்டு நவம்பர் 6-ஆம் தேதி அமெரிக்காவின் 16 ஆவது அதிபராக ஆபிரகாம் லிங்கன் தேர்ந்தெடுக்கப்பட்டார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com