
சுனில் கங்கோபாத்யாய வங்க மொழியில் எழுதிய இந்தியாவின் புகழ் பெற்ற எழுத்தாளர்களில் ஒருவர். இவர் தற்போதைய பங்களாதேஷின் பரித்பூர் மாவட்டத்தில் உள்ள பரிச்புரா என்னும் ஊரில் 07.09.1934 அன்று பிறந்தார்.
இவர் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் 1954-ஆம் ஆண்டு வங்க மொழியில் முதுகலை பட்டம் பெற்றார். கல்லூரி காலத்திலேயே 'க்ரித்திபஸ்' என்னும் கவிதைக்கான இதழ் ஒன்றை தொடங்கி நடத்தி வந்தார். அது பல புதிய அலை கவிஞர்களுக்கு ஒரு சிறந்த தளமாக விளங்கியது.
அப்படித் தொடங்கிய இவரது இலக்கிய பயணத்தில் 4 சிறுகதை தொகுப்புகள், 8 நாவல்கள் மற்றும் 5 மொழிபெயர்ப்பு நூல்களையும் எழுதியுள்ளார். மேலும் எண்ணற்ற கவிதைகளும் இவரது ஆக்கங்களாகும். இவர் 2008-ஆம் ஆண்டு 'சாகித்ய அகாதெமி' தலைவராகவும் தேர்தெடுக்கப்பட்டார்.
எண்ணற்ற விருதுகளை பெற்றுள்ள இவர் 23.10.2012 அன்று மாரடைப்பால் காலமானார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.