/

இலக்கியத் திறனாய்வும் படைப்பிலக்கியமும்

Updated On :14 அக்டோபர் 2012, 11:03 pm

இலக்கியத் திறனாய்வும் படைப்பிலக்கியமும் - முனைவர் ந.வெங்கடேசன்; பக்.208; ரூ.180;  குகன் பதிப்பகம், வடுவூர்-614 019; )094428 88099.

18, 19-ஆம் நூற்றாண்டுகளில் தோன்றிய திறனாய்வுக் கலை 20-ஆம் நூற்றாண்டில்தான் நன்கு வளர்ச்சி கண்டுள்ளது. இலக்கியங்களில் பயின்றுவரும் பொருள், உணர்ச்சி, கற்பனை, வடிவம் போன்ற பொதுமைகளின் அடிப்படையில் கொள்கைகளை உருவாக்குதல், படைப்புக்குரிய உண்மை, அழகு எனும் ஆதாரங்களைக் காட்டுதல், இலக்கியங்களைப் பற்றி எழும் வினாக்களுக்கு விடை காணுதல், இலக்கியத்தை நுகரும் முறையையும், நுகர்வோரின் தரத்தையும் வரையறுத்தல், படைப்பாளருக்கும் பயில்வோருக்கும் முறையான தொடர்பை உருவாக்குதல், எடுத்துக்கொண்ட இலக்கியத்தின் குறை-நிறைகளை அளவிடுதல், சிறந்த இலக்கியத்தை உருவாக்க படைப்பாளர்களுக்கு உதவுதல் போன்றவையே திறனாய்வு என்று கூறப்படுகிறது.

÷அத்தகைய திறனாய்வைச் செய்வதற்குத் திறனாய்வாளர் சில நடைமுறைகளைப் பின்பற்றி அதன்வழி, தான் எடுத்துக்கொண்ட நூலைத் திறனாய்வு செய்வது இன்றியமையாதது. அவ்வாறு பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் எவை எவை என்பன பற்றியும், திறனாய்வு செய்யப்படும் கருத்துகளை அறிவியல் முறைப்படி மேற்கொண்டு, அறிவுக்கும், உணர்வுக்கும் இடம் கொடுத்து உண்மைகளை மட்டுமே எடுத்துரைக்கும் ஒரு சிறந்த கலையே திறனாய்வு என்னும் அடிப்படையிலும் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

÷"தமிழ் இலக்கியம்' பயிலும் கல்லூரி மாணவர்களுக்குத் "திறனாய்வுக்கலை' ஒரு பாடமாக இருப்பதால், அதைப் பின்பற்றியே எழுதப்பட்டுள்ளதாக உள்ளது. குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு புதிய செய்திகளைத் தேடவேண்டியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.