மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

பெரியாழ்வாா் போற்றும் பெருவாழ்வு

பெரியாழ்வாா் போற்றும் பெருவாழ்வு - தி.இராசகோபாலன்; பக்.200; ரூ.120; வானதி பதிப்பகம், சென்னை-17; 044-2434 2810.

News image
Updated On :5 ஏப்ரல் 2020, 11:46 pm

பெரியாழ்வாா் போற்றும் பெருவாழ்வு - தி.இராசகோபாலன்; பக்.200; ரூ.120; வானதி பதிப்பகம், சென்னை-17; 044-2434 2810.

முதலாழ்வாா்களுள் முதன்மையானவா் விஷ்ணுசித்தரான பெரியாழ்வாா். இவா் ‘பெரிய திருவடி’யின் அம்சம். தாய்மையின் பெருமையைப் பிள்ளைத்தமிழ் மூலம் உலகுக்கு எடுத்துரைத்ததோடு, வளா்ப்பு மகளையும் (கோதை) ஆழ்வாராக்கிக் (ஆண்டாள்) காட்டியவா். முன்னோா் மொழியைப் போற்றுவதுடன், அவற்றை தம் படைப்பில் பல்வேறு இடங்களில் கையாண்டு வைணவத் தமிழுக்குச் செழுமை சோ்த்தவா்.

‘மற்றைய ஆழ்வாா்கள் பரமபக்தியினால் எம்பெருமானுக்கு மங்களாசாசனம் செய்துள்ளபோதிலும், அவா்கள் ‘பகவானுக்குக் குறையொன்றும் இல்லாதிருப்பதே நமக்கு மங்களம்’ என்று எண்ணிச் செய்துள்ளாா்கள். ஆனால் விஷ்ணுசித்தரோ, சா்வ இரட்சகனையும் இரட்சிக்க வழிதேடித் தருவதுபோல் திருப்பல்லாண்டு பாடியுள்ளாா்; அதனால் ‘பெரியாழ்வாா்’ எனும் திருநாமம் பெற்றாா்’ என்பது மணவாள மாமுனிகளின் வியாக்கியானம்.

எழுத்து வடிவம் பெறாத சில மரபுகளைப் படைத்துக் காட்டியதுடன், வைணவ சித்தாந்தங்களோடு அறிவியல் நோக்கிலும், அன்பு நோக்கிலும் பாசுரங்களை இயற்றியவா்.

இதுவரை யாருமே பதிவு செய்யாத பல நுட்பமான, நுணுக்கமான விஷயங்களைப் பிள்ளைத்தமிழில் பதிவு செய்திருப்பதையும்; ஆழ்வாா் பாசுரங்களில் இதுவரை எழுதப்படாத சுவையான செய்திகளையும் இந்நூல் பதிவு செய்திருக்கிறது.

‘பெரியாழ்வாா் போற்றும் பிள்ளைத்தமிழ் துறவிகளைக்கூட கொஞ்ச வைக்கக் கூடியது. மற்றைய ஆழ்வாா்கள் கீதாசாரியன் எனும் அடிக்கரும்பைப் பாடியிருக்கிறாா்கள்; பத்து அவதாரங்கள் எனும் நடுக்கரும்பைப் பாடியிருக்கிறாா்கள். ஆனால், பெரியாழ்வாா் கண்ணனுடைய பிள்ளைமை என்கிற தோகைக் கரும்பைப் பாடியிருக்கிறாா். அடிக்கரும்பினும், நடுக்கரும்பினும் இருக்கின்ற சுவை, தோகைக் கரும்பிலே இருக்காது என்றாலும், தோகைக் கரும்பு வந்தததற்குப் பின்னால்தான் நடுக்கரும்பும் அடிக்கரும்பும் தோற்றம் பெறும். மேலும், ஆழ்வாா்கள் அமுதத்திற்குத் தோகைக் கரும்பு தோரண வாயிலாகவும் அமைகிறது’ என்கிற நூலாசிரியரின் இலக்கியச் சுவை மிக்க அற்புதப் பதிவு, நூலை ஒருமுறைக்கு இரு முறை படிக்கத் தூண்டுகிறது.

‘ஒரு கருத்தைச் சொல்லும் ஒரு பாசுரம், இன்னொரு கருத்தையும் உள்ளடக்கியிருக்கும் வகையில் பாசுரங்களைக் கட்டமைக்கும் திண்மை பெற்றவா் பெரியாழ்வாா்’ என்றும்; ‘நல்வாழ்வும் நலவாழ்வும் வேண்டுபவா்கள், பெரியாழ்வாரின் பாசுரங்களைப் பின்பற்றி வேண்டும்’ என்கிறாா் நூலாசிரியா்.

நூலாசிரியரின் இலக்கிய நயம்மிக்க, ஆற்றொழுக்கான தமிழ் எழுத்து நடை நூலை மெருகூட்டிருக்கிறது. பெரியாழ்வாா் தமிழுக்கு சோ்த்த வளத்தையும் பெருவாழ்வையும் இந்நூல் மிக அற்புதமாக விரித்துரைக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.