பேரன்பின் பெருங்கடலாய்
மானும் மயிலுமாய்
பூக்களும் பட்டாம்பூச்சியுமாய்
அருவியும் தென்றலுமாய்
விளங்குகின்றன இவ்வரங்கில்
அதன் புகழ்பாட வந்தேன்
சிரியோனை பொறுப்பீர் முன்னம்...
பெண்ணாய் பிறந்ததேயென
சலித்தோரின்
துயர் துடைத்த கரங்கள்
நம் பெண்கள்...
அன்போடு அழகு கூட்டி
பண்போடு பாசம் வளர்த்து
அறிவோடு குறும்புகள் செய்து
கலாச்சாரத்தின் காவலாய்
குடும்பத்தின் குல விளக்காய்
குறையாத வளம் சேர்க்கும்
தெய்வத்தின் பிறவிகள்
நம் கண்மணிகள்
உயிர் தந்தாய்
உணவு தந்தாய்
அரவணைத்தாய்
ஆம் பெண்ணே நீயே கடவுள்
கல்நெஞ்சம் மனிதர்களை
புனிதப்படுத்தும்
உறுதிப் பூக்கள்
இனிய குரல் கேட்டால்
இளமையாகிறேன்
பார்வை பட்டால் மென்மையாகிறேன்
என்னவொரு அதிசயம்
நீ பெண்ணே
கள்ளமில்லாத
உன் சிரிப்பில்
உருகுவதில்
ஐஸ்கிரீமை மிஞ்சுகிறோம்
சுவாதியும் ஹாசினியும்
இழந்தது போதும்
இனி ஒரு விதி செய்வோம்
அழகின் அழகே
இனி நீ
அறிவை தீட்டு
பொறுமையின் பெருங்கடலே
வீரம் கொள்.
மௌனத்தின் மாமலையே
புயலாய் மாறு
பணிவின் பிறவியே
துணிவு கொள்
உடை திருத்து
தற்காப்பு பயில்
அச்சம் தவிர்
உச்சம் தொடு.
- ஜீவா காசிநாதன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இலவச ரேபிஸ் தடுப்பூசி: இந்திய மருத்துவத் துறையைப் பாராட்டிய ஜெர்மன் பயணி!

அபிஷேக் சர்மா அதிரடி: பஞ்சாப் கிங்ஸுக்கு 220 ரன்கள் இலக்கு!

வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்

தியேட்டரில் ரசிகர்களுடன் பிரதீப் ரங்கநாதன் - புகைப்படங்கள்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


