ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் தமிழக வீரர் நடராஜன் தேர்வாக வாய்ப்புள்ளதாகப் பலரும் எண்ணியிருந்த நிலையில் அவருக்குப் பதிலாக நவ்தீப் சைனி, டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகவுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது.
ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றது.
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது ஆஸ்திரேலியா. மெல்போர்னில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. 3-வது டெஸ்ட் சிட்னியில் நாளை முதல் தொடங்குகிறது. 4-வது டெஸ்ட் பிரிஸ்பேனில் ஜனவரி 15-ல் தொடங்குகிறது.
இந்நிலையில் சிட்னி டெஸ்டில் விளையாடவுள்ள இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியிலிருந்து மயங்க் அகர்வால் நீக்கப்பட்டுள்ளார். கடந்த டெஸ்டில் விளையாடிய உமேஷ் யாதவ், காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார். இதனால் சிட்னி டெஸ்டில் ரோஹித் சர்மா, சைனி ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள். விஹாரி தனது இடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகும் சைனி, சிராஜ் போல கவனம் ஈர்ப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
தமிழக வீரர் நடராஜன், சிட்னி டெஸ்டில் அறிமுகமாவார் என பலரும் ஆசைப்பட்டார்கள். ஆனால் நடராஜனின் டெஸ்ட் அறிமுகம் சிட்னியில் நிகழவில்லை. ஆஸ்திரேலியச் சுற்றுப்பயணத்தில் வலைப்பயிற்சிப் பந்துவீச்சாளராகத் தேர்வான நடராஜன், ஒருநாள், டி20 கிரிக்கெட் ஆட்டங்களில் அறிமுகமாகி அசத்தினார். பலருடைய பாராட்டுகளைப் பெற்றார். 2-வது டெஸ்டில் உமேஷ் யாதவுக்குக் காயம் ஏற்பட்டதால் டெஸ்ட் அணியிலும் நடராஜனுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் 3-வது டெஸ்டில் நடராஜன் இடம்பெறுவார் எனப் பலரும் எண்ணினார்கள். ஆனால் நடராஜனுக்கு முன்பு சைனி இந்திய அணிக்குத் தேர்வானதால் 3-வது டெஸ்டில் அவர் அறிமுகமாகவுள்ளார்.
எனினும் 4-வது டெஸ்டிலாவது நடராஜனுக்கு வாய்ப்பு கிடைத்து டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமாக வேண்டும் என அவருடைய ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிவகிரி பகுதியில் இன்று மின் நிறுத்தம்

16.5.1976: சினிமாவில் வன்முறை, ஆபாச காட்சிகள் தடை: மந்திரி கண்டிப்பு

4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை

ஆந்திரத்தில் 5-ஆம் தலைமுறை போா் விமானம் தயாரிக்கும் ஆலை: ராஜ்நாத் சிங், சந்திரபாபு நாயுடு அடிக்கல் நாட்டினா்
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

