கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 வழங்க நடவடிக்கை!பழமுதிர்சோலையில் விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு!ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்ற 2-வது நாளாக நடவடிக்கைதுணை முதல்வராக திருமாவளவன்!! காலம் சொல்லும்: அமைச்சர் வன்னி அரசு
/

சையத் முஷ்டாக் அலி டி20 போட்டி: நாளை முதல் தொடக்கம்

இப்போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது...

News image

சென்னை சேப்பாக்கம் மைதானம்

Updated On :9 ஜனவரி 2021, 5:32 pm IST

சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டி நாளை முதல் (ஜனவரி 10) ஆரம்பமாகிறது. ஜனவரி 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. லீக் சுற்றுகள் நடைபெறும் ஆறு நகரங்களில் வீரா்களுக்கான கரோனா பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது. 

கரோனா சூழலில் உள்நாட்டு போட்டிகளை நடத்துவது தாமதமாகிவிட்ட நிலையில், அவற்றில் முதலாவதாக இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. ரஞ்சி கோப்பை, விஜய் ஹஸாரே கோப்பை போட்டிகளை நடத்துவது தொடா்பான முடிவு, சையது முஷ்டாக் அலி போட்டியின் குரூப் சுற்று நிறைவுபெறும் தருணத்தில் எடுக்கப்படும் என்று தெரிகிறது.

ஜனவரி 10 முதல் ஜனவரி 19 வரை லீக் சுற்றுகள் நடைபெற்றுகின்றன. லீக் ஆட்டங்கள் பெங்களூர், சென்னை, கொல்கத்தா, வதோதரா, இந்தூர், மும்பை ஆகிய ஆறு நகரங்களில் நடைபெறவுள்ளன. 38 அணிகள் 6 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அனைத்து அணிகளும் தலா 5 ஆட்டங்கள் விளையாடவுள்ளன. குரூப் பி பிரிவில் உள்ள தமிழ்நாடு அணி தனது லீக் ஆட்டங்களை கொல்கத்தாவில் விளையாடவுள்ளது. நடப்பு சாம்பியனான கா்நாடக அணி ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. அந்த அணி தனது லீக் ஆட்டங்களை பெங்களூரில் விளையாடவுள்ளது.

ஜனவரி 26 முதல் நடைபெறவுள்ள நாக் அவுட் ஆட்டங்கள் ஆமதாபாத்தில் நடைபெறவுள்ளன. அங்கும் கரோனா பாதுகாப்பு வளையம் அமைக்கப்படவுள்ளது. காலிறுதி ஆட்டங்கள் ஜனவரி 26, 27 தேதிகளிலும் அரையிறுதி ஆட்டங்கள் ஜனவரி 29 அன்றும் இறுதிச்சுற்று ஜனவரி 31 அன்றும் நடைபெறவுள்ளன.  

இப்போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.