தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

ஆஸி. ஓபன் தகுதிச்சுற்று: அங்கிதா தோல்வி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் தகுதிச்சுற்றில் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா தோல்வி கண்டார்.

Updated On :14 ஜனவரி 2021, 4:23 am IST


மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் தகுதிச்சுற்றில் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா தோல்வி கண்டார்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் வரும் பிப்ரவரி 8-ஆம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டிக்கான மகளிர் தகுதிச்சுற்று போட்டி, துபையில் நடைபெற்று வருகிறது. புதன்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்றில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா 2-6, 6-3, 1-6 என்ற செட் கணக்கில் செர்பிய வீராங்கனை ஓல்கா டேனிலோவிச்சிடம் தோல்வி கண்டார். இதன்மூலம் ஆஸ்திரேலிய ஓபன் பிரதான சுற்றில் விளையாடும் வாய்ப்பை இழந்தார் அங்கிதா.
கிராண்ஸ்ட்ஸ்லாம் போட்டியின் பிரதான சுற்றில் விளையாட தகுதி பெறுவதற்காக இதுவரை 6 முறை முயற்சித்தபோதும், அவையனைத்தும் அங்கிதா ரெய்னாவுக்கு தோல்வியிலேயே முடிந்துள்ளது.
இந்தியாவில் இருந்து சுமித் நாகல் மட்டுமே ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்கிறார். அவருக்கு ஆடவர் ஒற்றையர் பிரிவில் வைல்ட்கார்டு (நேரடித்தகுதி) வழங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.