தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

ஐபிஎல் கிரிக்கெட்: ரூ. 11 கோடிக்கு கம்பீர் ஏலம்

பெங்களூர், ஜன.8: நான்காவது ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்காக கெüதம் கம்பீர் ரூ. 11 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி நிர்வாகம், கம்பீரை ஏலத்தில் எடுத்தது.  2008-ம் ஆண்டு ம

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

பெங்களூர், ஜன.8: நான்காவது ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்காக கெüதம் கம்பீர் ரூ. 11 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி நிர்வாகம், கம்பீரை ஏலத்தில் எடுத்தது.

 2008-ம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) நடத்தி வருகிறது.

 இந்த நிலையில் வரும் ஏப்ரல் முதல் மே வரை 4-வது ஐபிஎல் போட்டிகள் நடைபெறவுள்ளன. அணி வீரர்களை ஏலத்தில் எடுத்துக் கொள்ளும் முறை ஐபிஎல் போட்டிகளின் நடைமுறையில் இருந்து வருகிறது.

 கடந்த 3 ஆண்டுகளாக போட்டிகளில் 8 அணிகள் மட்டுமே பங்கேற்றன. இந்த முறை 10 அணிகள் பங்கேற்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கெனவே அணியில் இருந்த 4 வீரர்களை மட்டுமே அந்த அணி நிர்வாகம் ஒப்பந்தத்தை நீட்டித்துக் கொள்ளலாம் என்றும் விதிமுறை திருத்தப்பட்டுள்ளது.

 அதன்படி சென்னை அணியில் தோனி, ரெய்னா, முரளி விஜய், அல்பி மோர்க்கெல் ஆகியோரும், மும்பை அணியில் சச்சின், மலிங்கா, போலார்ட், ஹர்பஜன் சிங் ஆகியோரும் நீட்டிக்கப்பட்டுள்ளனர்.

 இந்த நிலையில் 4-வது ஐபிஎல் போட்டிகளுக்காக அணி வீரர்களை ஏலம் எடுக்கும் நிகழ்ச்சி பெங்களூரில் சனிக்கிழமை நடைபெற்றது. ஏலத்தில் 350 வீரர்கள் பெயர்கள் இடம்பெற்றன.

 அதிக அளவாக கெüதம் கம்பீர் ரூ. 11.04 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். கொல்கத்தா அணி நிர்வாகம் அவரை ஏலத்தில் எடுத்தது. இந்த அணியின் உரிமையாளர் நடிகர் ஷாருக் கான் என்பது குறிப்பிடத்தக்கது. ஏலம் நடைபெற்றபோது ஷாருக் அங்கு இல்லை.

 கடந்த 3 ஆண்டுகளாக தில்லி அணிக்கு விளையாடியவர் கம்பீர். கடந்த முறை கேப்டன் பதவியையும் கம்பீர் ஏற்றிருந்தார்.

 இதைத் தொடர்ந்து ஜாகீர்கானை ரூ. 4.14 கோடி கொடுத்தும், இலங்கை வீரர் தில்ஷனை ரூ. 2.99 கோடி கொடுத்தும் பெங்களூர் அணி ஏலத்தில் எடுத்தது. யூசுப் பதானை ரூ. 9.66 கோடி கொடுத்து கொல்கத்தா அணி வாங்கியது.

 இதேபோல தென் ஆப்பிரிக்க வீரர் ஜாக்ஸ் காலிûஸ ரூ. 5.06 கோடி கொடுத்து கொல்கத்தா அணி ஏலத்தில் எடுத்தது.

 இர்பான் பதான் ரூ. 8.74 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். டெல்லி அணி இவரை வாங்கியது.

 ஆனால் முன்னாள் கேப்டன் செüரவ் கங்குலி, மேற்கிந்தியத் தீவு முன்னாள் வீரர் பிரையன் லாரா, முன்னாள் கேப்டன் கிறிஸ் கெய்ல் ஆகியோரது பெயரை ஏலத்தில் அறிவித்தபோதும் அவர்களை ஏலத்தில் யாரும் எடுக்க முன்வரவில்லை.

 பஞ்சாப் அணிக்கு ஆடி வந்த யுவராஜ் சிங்கை, பூனா அணி ரூ. 8.28 கோடி கொடுத்து வாங்கியது.

 ரோஹித் சர்மாவை ரூ. 9.2 கோடி கொடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது.

 நியூஸிலாந்தின் ஜெஸ்ஸி ரைடர், தென் ஆப்பிரிக்க வீரர்கள் கிப்ஸ், மார்க் பெüச்சர், இங்கிலாந்து வீரர் கிரீம் ஸ்வான் ஆகியோர் ஏலத்தில் எடுக்கப்படவில்லை.

 தென் ஆப்பிரிக்க வீரர் ஏ.பி. டிவில்லியர்ஸ், நியூஸிலாந்து கேப்டன் டேனியல் வெட்டோரி ஆகியோரையும் பெங்களூர் அணி வாங்கியுள்ளது.

 ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, நியூஸிலாந்து வீரர் ராஸ் டெய்லரை ரூ. 4.6 கோடி கொடுத்து வாங்கியது. மேலும் தென் ஆப்பிரிக்க வீரர் ஜோகன் போத்தாவையும் அந்த அணி வாங்கியது.

 இதேபோல ஆஸ்திரேலிய வீரர் ஆன்ட்ரூ சைமண்ட்ûஸ மும்பை அணி வாங்கியது.

 நியூஸிலாந்து வீரர் மெக்கல்லமை கொச்சி அணியும், தென் ஆப்பிரிக்க கேப்டன் கிரீம் ஸ்மித்தை பூனா வாரியர்ஸ் அணியும், ஆஸ்திரேலிய வீரர் ஆடம் கில்கிறிஸ்டை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் ஏலத்தில் எடுத்தன.

 மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடி வந்த செüரவ் திவாரியை, பெங்களூர் அணியும், ஆஸ்திரேலியாவின் டேவிட் ஹஸ்ஸியை பெங்களூர் அணியும் ஏலத்தில் பெற்றன.

 தென் ஆப்பிரிக்க வீரர் டேல் ஸ்டெயினை டெக்கான் சார்ஜர்ஸ் அணி ரூ. 5.5 கோடி கொடுத்து வாங்கியது.

 தென் ஆப்பிரிக்க வீரர் மோர்ன் மார்க்கெலை, தில்லி அணி வாங்கியது.

 ஞாயிற்றுக்கிழமையும் ஏலம்: சனிக்கிழமை தினத்தில் ஏலத்தில் எடுக்கப்படாத வீரர்கள், ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஏலத்தில் எடுக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.

 இம்முறை 10 அணிகள் போட்டியில் பங்கேற்பதால் அதிக வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்படுவர் என்று தெரியவந்துள்ளது.

 ஒவ்வொரு அணியும் 30 வீரர்களை ஏலத்தில் எடுத்துக் கொள்ளலாம். இதற்கான தொகையாக ரூ. 41.4 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 டெக்கான் சார்ஜர்ஸ், கொல்கத்தா, கிங்ஸ் லெவன் பஞ்சாப், பூனா, கொச்சி ஆகிய அணிகள் தங்களது வீரர்களை ரூ. 41.4 கோடி வரை கொடுத்து ஏலத்தில் பெறலாம்.

 சென்னை, மும்பை அணிகள் ஏற்கெனவே தலா 4 வீரர்களை ரூ.20.7 கோடிக்கு ஒப்பந்தம் செய்துவிட்டது. இதனால் அந்த 2 அணிகளும் மீதமுள்ள ரூ.20.7 கோடி வரை வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம்.

 மொத்தம் ரூ.345 கோடிக்கு வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்படவுள்ளனர் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.