திருச்சி, ஏப். 21: திருச்சியில் நடைபெற்ற சர்வதேச டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் குரேஷிய வீரர் மரீன் பிரடெரிக் சாம்பியன் பட்டம் வென்றார்.
தமிழ்நாடு டென்னிஸ் சங்கம், திருச்சி மாவட்ட டென்னிஸ் சங்கம் ஆகியன இணைந்து நடத்திய சர்வதேச டென்னிஸ் போட்டிகள் திருச்சி யூனியன் கிளப் வளாகத்தில் நடைபெற்று வந்தன. இந்தியாவிலிருந்து 21 வீரர்களும், குரேஷியா, செர்பியா, போலந்து, பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 7 வீரர்களும் போட்டிகளில் பங்கேற்றனர்.
ஆடவர் இரட்டையர் இறுதிப் போட்டியில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன் - விஜய் சுந்தர் பிரஷாந்த் இணை சாம்பியன் பட்டம் வென்றது.
ஒற்றையர் பிரிவு: ஒற்றையர் பிரிவுக்கான இறுதி ஆட்டம் சனிக்கிழமை காலை நடைபெற்றது. இதில் குரேஷிய வீரர் மரீன் பிரடெரிக் 4-6, 6-3, 7-6 என்ற செட் கணக்கில்
செர்பியாவின் அர்சென்ஜி லேக்டோனோவிக்கை வென்றார். காலை 9 மணிக்குத் தொடங்கிய இந்த போட்டி ஏறத்தாழ 3 மணி நேரம் நீடித்தது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாது இரு வீரர்களும் வெற்றிக்காக கடுமையாகப் போராடினர். இறுதி செட்டில் இருவரும் தலா 6 புள்ளிகள் எடுத்ததால் டை பிரேக்கர் முறை பின்பற்றப்பட்டது. இதில் 7-3 என்ற கணக்கில் வென்று, ஆடவர் ஒற்றையர் சாம்பியன் ஆனார் மரீன் பிரடெரிக்.
பரிசளிப்பு: தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற மரீன் பிரடெரிக், இரண்டாமிடம் பெற்ற அர்சென்ஜி லேக்டோனோவிக், இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன் - விஜய் சுந்தர் பிரஷாந்த் ஜோடி, இரண்டாமிடம் பெற்ற ருபேஷ் ராய் - விவேக் ஷோகீன் ஜோடி ஆகியோருக்கு தமிழ்நாடு டென்னிஸ் சங்க துணைத் தலைவர் கார்த்தி சிதம்பரம் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.
அப்போது அவர் பேசியது: சர்வதேச அளவிலான போட்டிகள் சென்னையில் மட்டுமே நடைபெற்று வந்தன. தற்போது திருச்சியில் நடைபெற்றுள்ளது. டென்னிஸ் போட்டியைக் காண அதிகமானோர் வந்திருப்பது பாராட்டுக்குரியது. கடுமையான வெயில் வீசிய நிலையிலும் வீரர்கள் விடா முயற்சியுடன் சிறப்பாக விளையாடினார்என்றார்.
பரிசளிப்பு நிகழ்ச்சியில் தமிழ்நாடு டென்னிஸ் சங்கச் செயலர் சி.பி.என். ரெட்டி, பொருளாளர் ராஜீவ் நாயுடு, திருச்சி மாவட்ட டென்னிஸ் சங்கத் தலைவர் கே. நீதி, செயலர் எஸ். விஸ்வநாதன், பொருளாளர் எஸ். அசோக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!

இம்பாக்ட் வீரர் விதி இளம் வீரர்களுக்கான பொன்னான வாய்ப்பு: பிரப்சிம்ரன் சிங்

களைகட்டிய புதுச்சேரி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு!

எரிவாயு இறக்குமதி? கத்தார் சென்றார் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர்!
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


