ஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

மாநில ஹாக்கிப் போட்டி : அரையிறுதியில் ஐ.சி.எஃப், தெற்கு ரயில்வே அணிகள்

திருச்சி, மே 3 : திருச்சியில் நடைபெற்று வரும் மாநில அளவிலான ஹாக்கிப் போட்டியின் அரையிறுதிக்கு ஐ.சி.எஃப், தெற்கு ரயில்வே, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகிய அணிகள் முன்னேறியுள்

Updated On :20 செப்டம்பர் 2012, 1:06 am

திருச்சி, மே 3 : திருச்சியில் நடைபெற்று வரும் மாநில அளவிலான ஹாக்கிப் போட்டியின் அரையிறுதிக்கு ஐ.சி.எஃப், தெற்கு ரயில்வே, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகிய அணிகள் முன்னேறியுள்ளன.

திருச்சி ஜோ ஜோ ஹாக்கி சங்கம் சார்பில், தினேஷ் பி. கண்ணா நினைவு 2-ம் ஆண்டு மாநில அளவிலான ஹாக்கி போட்டி திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது.

வியாழக்கிழமை நடைபெற்ற காலிறுதி ஆட்டங்களில் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை அணி 7-0 என்ற கோல் கணக்கில் மதுரை ரிசர்வ் லயன் அணியை வென்றது. சிறப்புக் காவல்படை அணி வீரர்கள் டேவிட் ஆரோக்கியராஜ் 3 கோல்களும், கந்தகுரு 2 கோல்களும், கண்ணன், ரகு ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர்.

தெற்கு ரயில்வே அணி 5-1 என்ற கோல் கணக்கில் இந்தியன் வங்கி அணியை வென்றது. தெற்கு ரயில்வே வீரர்கள் மனோஜ் 2 கோல்களும், திவாகரன், மகேந்திர சிங், ஜயராஜ் ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர்.

சென்னை ஐ.சி.எஃப். அணி 3-2 என்ற கோல் கணக்கில் மத்திய கலால் துறை அணியை வென்றது. ஐ.சி.எப். வீரர்கள் அசோக்குமார் 2 கோல்களும், ஷியாம்குமார் ஒரு கோலும் அடித்தனர்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி 9-0 என்ற கோல் கணக்கில் வாடிப்பட்டி எவர்கிரேட் அணியை வென்றது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வீரர்கள் வினோத் ராயர், பி. தாமு ஆகியோர் தலா 3 கோல்களும், எம்.கே. முட்டப்பா, கரியப்பா, அருள் ஸ்டாலின் ஆகியோர் தலா ஒரு கோலும்

அடித்தனர்.

காலிறுதியில் வெற்றி கண்ட 4 அணிகளும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள அரையிறுதி ஆட்டங்களில் விளையாடுகின்றன. இறுதி ஆட்டம் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.