கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்கு எதிரான ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது சென்னை சூப்பர் கிங்ஸ்.
சூப்பர் கிங்ஸின் தொடக்க ஆட்டக்காரர்களான மைக் ஹசி 86, முரளி விஜய் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
மொஹாலியில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பஞ்சாப் 19.5 ஓவர்களில் 138 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் ஆடிய சூப்பர் கிங்ஸ் 17.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 139 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் விக்கெட் இழப்பின்றி வெற்றி கண்ட 6-வது அணி என்ற பெருமை சென்னை சூப்பர் கிங்ஸ் வசமானது.
ஹசி சகோதரர்கள் 1,000: பஞ்சாபுக்கு எதிராக 22 ரன்கள் எடுத்தபோது சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் மைக் ஹசி, ஐபிஎல் போட்டியில் 1,000 ரன்களை எட்டினார். இதுவரை 31 போட்டிகளில் விளையாடியுள்ள மைக் ஹசி 1,064 ரன்கள் எடுத்துள்ளார்.
பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ள மைக் ஹசியின் சகோதரரான டேவிட் ஹசி, சென்னைக்கு எதிரான 21 ரன்கள் எடுத்தபோது ஐபிஎல் போட்டியில் 1,000 ரன்களை எட்டினார். இதுவரை 49 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 1,020 ரன்கள் எடுத்துள்ளார். ஒரே போட்டியில் சகோதரர்கள் இருவரும் 1,000 ரன்களைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசியலுக்கு வருவது எப்போது? 2013-ல் நடிகர் விஜய்யின் பதில்!

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! அமெரிக்கா - ஈரான் ஒப்பந்தத்தை பாதிக்கிறதா?

ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

பேரவையில் கட்சித் தலைவர்களின் துதிபாடல்தான் நடக்கிறது! பிரேமலதா
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK


